பாக். - ஆப்கன் எல்லையில் தாவூத் பதுங்கியிருக்கிறார்... ராஜ்நாத் தகவல்
டெல்லி: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் பதுங்கி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாக காரணமான மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டு, இந்திய அரசால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். இவர் பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘தாவூத் பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையில் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தயக்கம்...
பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவை கடைபிடிக்க விரும்பினாலும் நம்முடன் நட்பு பாராட்ட அந்நாடு தயக்கம் காட்டுகின்றது.

பாகிஸ்தானின் பங்களிப்பு...
இந்தியாவில் நிலவும் தீவிரவாதம் உள்நாட்டில் உருவானது அல்ல. வெளியில் இருந்து ஏவப்பட்டது. முழுக்க, முழுக்க பாகிஸ்தானின் பங்களிப்பால் உருவாக்கப்பட்டது.

ஐ.எஸ்.-ன் தீவிரவாதம்...
ஆனால், அந்நாட்டு அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ‘ஐ.எஸ்.'-சுக்கும் அந்நாட்டு அரசுக்கும் சம்பந்தம் இல்லையா? ‘ஐ.எஸ்.' தான் இங்கு தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றது.

மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கு...
2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு பாகிஸ்தான் கோர்ட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது.

மோடியின் வேண்டுகோள்...
பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, ‘மும்பை தாக்குதலுக்கு காரணமான தாவூத் இப்ராஹிமை எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று நமது பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அவன் மிகவும் தேடப்படும் குற்றவாளி என்பதால் இது தொடர்பாக நாம் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

பாக். - ஆப்கன் எல்லையில்...
தற்போது அவன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப்பகுதியில்தான் இருக்கிறான்' என்று பேசினார்.

அதெல்லாம் ரகசியம்...
தாவூத் இப்ராஹிமை உடனடியாக பிடிப்பது தொடர்பான திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், ‘எங்களுக்கு சற்று அவகாசம் அளியுங்கள். அந்த திட்டங்களை எல்லாம் பகிரங்கமாக அறிவித்துவிட முடியாது.

ராஜதந்திரம்...
இதற்கான காலக்கெடுவையும் விதிக்க முடியாது. ஆனால், தாவூத்தை பாகிஸ்தான் நம்மிடம் ஒப்படைக்கும் அளவுக்கு ராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுத்து வருகிறோம்.

சார்க் உச்சி மாநாடு...
அடு்த்த வாரம் சார்க் உச்சி மாநாடு, நேபாளத்தில் நடக்கவுள்ளது. அம்மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி,பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அப்போது இருதரப்பு குறித்து பேசுவதற்கான வாய்ப்பு இல்லை.

பாக்.கின் நிலைப்பாடு...
சமீப காலமாக நவாஸ் ஷெரீப,காஷ்மீர் பிரிவினைவாதி தலைவர்களிடம் பேசுவது குறி்த்து தங்களது நிலைப்பாடு தெளிவாக இருந்திருந்தால் நாம் அதற்குரிய நடவடிக்கை எடுத்திருக்கலாம்.ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications