For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் 48 மணிநேரத்தில் 4 முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 48 மணி நேரத்தில் 4 முறை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஹமிர்புர் பகுதியில் நேற்று நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று காலை மீண்டும் சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். பின்னர் கிருஷ்ணா காடி, பிம்பெர் காலி செக்டாரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

கடந்த 48 மணி நேரத்தில் 4 முறை இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 2 மாதங்களில் 150க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A day after an Indian army soldier was killed along the Line of Control in unprovoked firing by Pakistani troops, yet another incident of ceasefire violation has been reported from the Krishna Ghati and Bhimber Gali sectors in Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X