இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு!
ஸ்ரீநகர்: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அவ்வப்போது அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளது. இதற்கு, இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 8 முறை இது போன்ற தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் காலையில் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவமும் அதே வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இன்று காலையில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் சம்பவம் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications