எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்தியா பதிலடி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு பிறகும், அடிக்கடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

Pakistan violates ceasefire in Nowshera sector of Rajouri district. Indian Army retaliating.

தீவிரவாதிகளை ஒழித்து கட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், ரஜோரி மாவட்டமான நவ்சேரா பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலை அரங்கேற்றி உள்ளது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இதில் தீவிரவாதி உயிரிழந்தான். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+