என் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. பாலில் விஷம் வைத்து 17 பேரை கொன்ற பெண் வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாலில் விஷம் வைத்து 17 பேரை கொன்ற மனைவி- வீடியோ

  இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன்பு ஆசியா பீபி என்ற பெண்ணுக்கு கட்டாய திருமண செய்து வைக்கப்பட்டு இருக்கிறது. இவர் பல நாட்களாக அவரது கணவனுடன் வாழ பிடிக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

  இவருக்கு வேறு ஒரு காதல் இருந்ததால் அவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டு பாலில் விஷம் கலந்து இருக்கிறார். ஆனால் அந்த பாலை அவரை தவிர வீட்டில் இருக்கும் மற்ற அனைத்து நபர்கள்களும் குடித்துள்ளனர். இதனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

  இதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் எப்படியெல்லாம் கொலை செய்ய திட்டமிட்டார் என்பதை மிகவும் வித்தியாசமாக போலீசிடம் வாக்குமூலமாக தெரிவித்து இருக்கிறார்.

   பாகிஸ்தானில் கட்டாய திருமணம்

  பாகிஸ்தானில் கட்டாய திருமணம்

  பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவது வழக்கம். இதனால் அடிக்கடி கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அங்கு வழக்கம் ஆகி இருக்கிறது. தற்போது இதே போன்றதொரு சம்பவம் பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து இருக்கிறது. பஞ்சாப்பில் வசித்து வந்து ஆசியா பீபி என்ற 21 வயது பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் அஜ்மத் அக்ரம் என்ற 25 வயது ஆணை கட்டாயமாக திருமணம் செய்து வைத்து இருக்கிறார்கள். இந்த திருமணம் தற்போது பெரிய பிரச்சனையில் முடிந்து இருக்கிறது.

   கணவனுடன் சண்டை

  கணவனுடன் சண்டை

  இந்த திருமணம் முடிந்த நாளில் இருந்து இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து இருக்கிறது. அஜ்மல் அந்த பெண்ணை தினமும் எதாவது காரணம் சொல்லி அடித்திருக்கிறார். மேலும் அவளது முன்னாள் காதலன் குறித்தும் கேள்விகள் கேட்டு கொடுமை படுத்தி இருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண் அந்த வீட்டை விட்டு தனது சொந்த வீட்டுக்கு ஓடி விடலாம் என்று கூட முடிவு செய்து இருக்கிறார். ஆனால் எந்த விஷயத்திற்கும் இருவர் வீட்டிலும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கணவனை கொன்றுவிடலாம் என முடிவு செய்து இருக்கிறார்.

   பாலில் விஷம்

  பாலில் விஷம்

  இதையடுத்து தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல நிறைய திட்டங்களை தீட்டி இருக்கிறார். கடைசியில் பாலில் விஷம் கலந்து கொன்றுவிடலாம் என முடிவு செய்து இருக்கிறார். இதற்காக அவளது காதலன் ஷாஹித் அப்பெண்ணுக்கு விஷம் வாங்கி கொடுத்து இருக்கிறார். இதை அந்தப் பெண் பாலில் கலந்து கணவனிடம் கொடுத்து கொலை செய்துவிடலாம் என முடிவு செய்து இருக்கிறார்கள். அவன் இறந்த பின் அங்கிருந்து ஓடிச்சென்று சேர்ந்து வாழலாம் எனவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

   சொதப்பிய திட்டம்

  சொதப்பிய திட்டம்

  இந்த நிலையில் ஆசியா விஷம் கலந்து கொடுத்த பாலை அவரின் மாமியார் எடுத்து அதனுடன் இன்னும் கொஞ்சம் பால் சேர்ந்தது 'லஸ்ஸி' செய்து அவர்கள் வீட்டில் இருந்த 27 பேருக்கும் கொடுத்து இருக்கிறார். இதை குடித்த 27 பெரும் உடனடியாக மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை மொத்தம் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 10 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

   காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்

  காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்

  இதையடுத்து போலீசார் ஆசியாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர். விசாரணையின் தொடக்கத்தில் பாலில் பல்லி விழுந்துவிட்டதாக பொய் சொல்லி உள்ளார். பின் உண்மையை ஒப்புக் கொண்டவர் "நான் என் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகவே இப்படி செய்தேன். ஆனால் அது இந்த அளவுக்கு சென்று முடியும் என்று நினைக்கவில்லை. நான் என் காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்'' என்று கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Pakistani bride allegedly kills 17 relatives with poisoned milk. Aasia Bibi was married to a relative against her will in September in a village in the Pakistan Punjab.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற