காஷ்மீரில் பிடிபட்ட 'அப்ரெண்டிஸ்' பாக். தீவிரவாதி... அமுக்கினிகளான பாகிஸ்தான் ஊடகங்கள்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி கிராம மக்களை சிறைபிடித்த பாகிஸ்தான் தீவிரவாதி உயிரோடு சிக்கியுள்ளான். அவனும் இந்துக்களைக் கொல்வதற்காகவே ஊடுருவியதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களோ இதுபற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களே தைரியமாகப் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதி முகமது நவீத் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளிவுறவு அமைச்சரக அதிகாரி, ஆமாம், கைது பற்றி கேள்விப்பட்டோம், ஆனால் இது பாகிஸ்தானை சிக்கவைக்க இந்திய அதிகாரிகள் மேற்கொள்ளும் இன்னொரு தந்திரமாகதான் தெரிகிறது என கூறியுள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் பற்றி பாகிஸ்தான் வெளிவுறவுத் துறை அதிகாரபூர்வமாக எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. அதேபோல் பாகிஸ்தானின் அச்சு ஊடகங்கள் இது பற்றி எந்த ஒரு செய்தியையும் வெளியிடவும் இல்லை.
அதே நேரத்தில் ஒரு சில தொலைக்காட்சிகள் இந்தியா எல்லையில் இருந்து தாக்குதல் நடத்தியதாகவும் இதில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் மட்டும் செய்திகள் ஒளிபரப்பின. அதே நேரத்தில் இந்தியாவிடம் சிக்கியுள்ள தீவிரவாதி நவீத் பற்றி மூச்சே விடவில்லை இந்த ஊடகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications