அஸ்ரப் கானி இருக்கும் வரை.. தாலிபான்கள் ஓய மாட்டார்கள்.. ஆப்கன் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் இம்ரான்
இஸ்லாமாபாத்: அஸ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் அதிபராக இருக்கும் வரை தாலிபான்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவர மாட்டார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இப்போது மிக மோசமான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கப் படைகள் இருக்கும் வரை அமைதியாக இருந்த தாலிபான்கள், அமெரிக்கப் படைகளை வெளியேறியதுமே தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 80% இடங்களைத் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். அதேபோல இப்போது நகரங்களைக் குறிவைத்தும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர்.

ஆப்கன் நிலை
ஆப்கன் நாட்டில் நடைபெறும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகச் சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஆப்கன் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே தோஹாவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் இப்போது வரை எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆப்கனில் தாக்குதல்கள் தான் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

வாய்ப்பில்லை
இந்தச் சூழலில் ஆப்கன் விவகாரம் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், "மூன்று நான்கு மாதங்களுக்கு முன் தாலிபான் தலைவர்கள் இங்கு வந்த போது அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் ஆப்கானிஸ்தானில் அஸ்ரப் கானி அரசு இருக்கும் வரை அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். இதனால் அஸ்ரப் கானி அரசு இருக்கும் வரை ஆப்கனில் அமைதி திரும்ப வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்.

மீண்டும் அமெரிக்கப் படைகள்
இப்போது ஆப்கன் அரசு மீண்டும் அமெரிக்கப் படைகளை அழைத்து வர முயல்வதாகச் செய்திகள் எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் ஏற்கனவே இங்கு 20 ஆண்டுகள் இருந்தனர். இத்தை ஆண்டுகளாக அவர்களால் செய்ய முடியாததை இப்போது மட்டும் எப்படிச் செய்வார்கள்? அதேபோல ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு எங்கள் நாட்டில் அமெரிக்கத் தனது ராணுவ தளங்களை அனுப்ப அமைக்கத் தேவையில்லை, இதில் பாகிஸ்தான் நாட்டின் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்" என்றார்.

என்ன பிரச்சினை
அமெரிக்காவின் நீட்சியாகவே அஸ்ரப் கானி அரசைத் தாலிபான்கள் கருதுகின்றனர். இதனால் தான் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதலே இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் போதிலும் அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இப்போது இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்காவே நேரடியாகக் களமிறங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறும் நிலையில், அதற்குள் அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்க முயல்கிறது.

தாலிபான்களின் அசுர வளர்ச்சி
ஆனால், இதற்கெல்லாம் தாலிபான்கள் காத்திருப்பதாகத் தெரியவில்லை. முதலில் எல்லைகளையும் கிராமப் புறங்களையும் கைப்பற்றிய தாலிபான்கள் இப்போது மாகாண தலைநகரங்களை நோக்கி தங்கள் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட மாகாண தலைநகர்களைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சூழலில் ஆப்கன் தலைநகர் காபூல் இன்னும் 30 நாட்களில் தனிமைப்படுத்தப்படும் என்றும் 90 நாட்களில் தாலிபான்கள் அதைக் கைப்பற்றிவிடுவார்கள் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications