'கெட்ட சகுனம்' பிரதமர் மோடியை அட்டாக் செய்த ராகுல்.. கொதித்த நிர்மலா.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க
ஜெய்ப்பூர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை பிரதமர் மோடி நேரில் பார்க்க சென்ற நிலையில், அது தொடர்பாக ராகுல் காந்தி, இந்திய அணியின் தோல்வியை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். இதற்கு நிர்மலா சீதாராமனும் பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி அங்கு நிலவுகிறது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் அமையும் என்பதால், பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இரு கட்சிகளுமே கவர்ச்சிகர வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளது. ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இறுதி கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தானின் ஜலோர் பகுதியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில் பேசிய அக்கட்சியின் எம்.பி ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும், உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பேசிய ராகுல், "நமது இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர். கிட்டத்தட்ட உலக கோப்பையை நெருங்கி விட்டார்கள். ஆனால், ஒரு கெட்ட சகுனம் அவர்களை தோற்கடிக்க வைத்து விட்டது" எனப் பேசினார்.
குஜராத்தின் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியை நேரில் காண பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் சென்று இருந்தனர். இந்திய அணி தோல்வி அடைந்த பிறகும் வீரர்களின் ஓய்வறைக்கு சென்ற பிரதமர் மோடி, விளையாட்டில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் என்றும் சிறப்பாக விளையாடியாவதாகவும் ஆறுதல் படுத்தினார்.

பிரதமர் மோடி உலக கோப்பையை நேரில் காண சென்ற நிலையில், ராகுல் காந்தி இது குறித்து மறைமுகமாக விமர்சிக்கும் நோக்கில் இவ்வாறு பேசியதாக தெரிகிறது. ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:- விளையாட்டில் வெற்றியும் கிடைக்கும் தோல்வியும் கிடைக்கும். பிரதமர் குறித்து இழிவாக பேசும் காங்கிரஸ் பாரம்பரியத்தை ராகுல் காந்தியும் தொடர்கிறார்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications