அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு சபைகளும் ஒத்திவைப்பு!
டெல்லி: மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு சபைகளும் 2 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேகலாயாவில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது. அவரது மறைவு நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு 7 நாட்கள் அரசுமுறை துக்கமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அப்துல் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடின. லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ராஜ்யசபாவில் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தியை வாசித்தனர்.
இதன் பின்னர் லோக்சபா 2 நாட்களுக்கும் மற்றும் ராஜ்யசபா ஒருநாள் மட்டும் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ராஜ்யசபாவையும் 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications