26ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்- 3 அவசர சட்ட மசோதாக்கள் நிறைவேறுமா?
டெல்லி: டெல்லியில் வருகின்ற 26 ஆம் தேதியன்று துவங்குகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 3 அவசர சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறிப்பிடத்தக்க வகையில் அலுவல் எதுவும் நடக்காமல் வீணடிக்கப்பட்டது.

அத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை முறைப்படி சட்டமாக்குவதற்கான மசோதாவினை நிறைவேற்ற முடியாமல் போனது.
3 முக்கிய மசோதாக்கள்:
இதனால் அந்த அவசர சட்டம் காலாவதியானது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 26 இல் துவங்குகிறது. இத்தொடரில் வேறு மூன்று முக்கிய அவசர சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.க தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம் காட்டும் எனத் தெரிகிறது.
கூட்டத்தொடரில் முக்கியத்துவம்:
வங்கி காசோலைகள் பணமின்றி திரும்பி வருவது தொடர்பான "நெகோஷியபிள் இன்ஸ்ட்ரூமென்ட்" சட்ட மசோதா, ஐகோர்ட்டுகளின் வர்த்தக மேல்முறையீட்டு மன்றங்கள் பிரிப்பு தொடர்பான மசோதா முறையீடு மற்றும் சமரச அவசர சட்ட மசோதா ஆகியவற்றுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முக்கியத்துவம் தரப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
எதிர்ப்பு இருக்குமா?:
குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்புத் திட்டம் வகுத்துள்ளனர்.
நீண்ட காலமாக நிறைவேறாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன.
அனைத்துக் கட்சிக் கூட்டம்:
எனவே இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டத்தை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நாளை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து முக்கிய மசோதாக்கள் நிறைவேற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நோக்கில் 26 இல் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் அவர் கூட்டவுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications