இப்படி கூட நடக்குமா? என்ஜின் இல்லாமல் திடீரென ஓடிய ரயில்.. ஷாக்கில் உறைந்த பயணிகள்..இந்தியாவில் தான்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சஹிபாஞ்ச் பகுதியில் வழக்கத்திற்கு மாறான ஒரு வினோத சம்பவம் நடைபெறுள்ளது. ரயிலில் என்ஜின் இல்லாமல் நிறுத்தப்பட்டு இருந்த பெட்டிகள் தானாக திடீரென ஓடியது. லோகோ பைலட் உள்பட ரயில் பெட்டியில் யாரும் இல்லை. இந்த வினோத சம்பவம் குறித்த முழு விவரம் வருமாறு:-
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஷகிபாஞ்ச் பகுதியில் உள்ள பர்ஹர்வா பகுதியில் காலி ரயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. மல்டா ரயில்வே டிவிஷன் அதிகார வரம்புக்கு வரும் இந்த ரயில் நிலையத்தில், சரக்குகளை இறக்குவதற்காக ரயில் நிறுத்தப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. அப்போது திடீரென ரயில் தானாக நகரத் தொடங்கியது. தொடர்ந்து தண்டவாளத்தில் சில மீட்டர் தொலைவிற்கு ரயில் தானாக ஓடியது.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் ரயில் தானாக ஓடியதை ஆச்சர்யத்துடன் பார்த்த படி ஆபத்தை உணராமல் ஓடிச்சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். சில இளைஞர்களோ செல்பியும் எடுப்பதை பார்க்க முடிந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. எக்ஸ் தளத்தில் உத்கர்ஷ்சிங் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவுக்கு கேப்ஷான அவர் பதிவிட்டுள்ள பதிவில், "என்ஜின் இல்லாமல் ரயில் ஓடியதை எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? ஜார்க்கண்டின் சஹிபஞ்ச் பகுதியில் ரயில் என்ஜின் இல்லாமலேயே ஓடியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மெயின் டிராக்கில் ரயில் பெட்டிகள் சென்றுள்ளது. நல்லவேளையாக வேறு எந்த ரயிலுடனும் மோதவில்லை" என்று கூறியுள்ளார்.
ரயில் பெட்டிகள் தானாக ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்களும் தங்கள் கருத்துக்களை ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். ரயிலில் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் ரயில்வே ஊழியர்கள் ஏன் நிறுத்தி வைத்தார்கள் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல், ஆபத்தை உணராமல் ஓடிச்சென்று செல்போனில் வீடியோ எடுப்பவர்களும் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக நெட்டிசன்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
ரயில்வே டிராக்கில் யாராவது வழக்கம் போல ரயில் நின்று கொண்டு தானே இருக்கிறது என அலட்சியமாக தண்டவாளத்தை கிராஸ் செய்தாலோ.. அல்லது வேறு ரயில்கள் அவ்வழியாக வந்து இருந்தாலோ பெரும் விபரீதம் ஏற்பட்டு இருக்கும் எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ரயில் பெட்டிகள் தானாக ஓடிய சம்பவம் தொடர்பாக உள்ளூர் ரயில்வே அதிகாரிகள் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications