அமெரிக்காவால் அவமதிக்கப்பட்ட இந்திய பிரபலங்கள்
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தொடங்கி ஏகப்பட்ட இந்திய பிரபலங்களை கிள்ளு கீரைபோல அவமதித்திருக்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவில் தூதரக பணியாளர் தேவ்யானி விவகாரம், இந்தியாவுடனான உறவில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு உரைக்கும் வகையில் பாதுகாப்பு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
இந்திய பிரபலங்களை இப்படியெல்லாம் அமெரிக்கா அவமதிப்பது ஒன்றும் புதியதும் அல்ல. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமையே அவமானப்படுத்தியது அல்லவா அமெரிக்கா

அப்துல்கலாம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை அமெரிக்க விமான நிலையத்தில் ஷூவை கழற்றச் சொல்லி சோதனையிட்டு அமெரிக்கா அவமானப்படுத்தியது, இது நாட்டில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸையும் அக்குவேறாக ஆணிவேறாக சோதனை நடத்தி அவமானப்படுத்தியது அமெரிக்கா.

ஷாருக், கமல்
இதேபோல் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ஷாருக்கானும் அமெரிக்காவின் அதிதீவிர விசாரணை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மீரா சங்கர்
இந்திய தூதர் மீரா சங்கரும் கூட அமெரிக்க விமான நிலையத்தில் தோளில் தட்டி உட்கார வைக்கப்பட்டார்.

பிரபுல் படேல்
2010ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சர் பிரபுல் படேலும் இத்தகைய அவமானகரமான சோதனைக்குள்ளானவரே.

ஐ.நாவுக்கான தூதர்..
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ஹர்தீப் புரியின் டர்பனை கழற்றச் சொல்லி அவரை தடுத்தும் வைத்து அவமதித்தனர் அமெரிக்கர்கள்.

கீர்த்திகா பிஸ்வாஸ்
2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய கீர்த்திகா பிஸ்வாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

தேவ்யானி
இந்தப் பட்டியலில்தான் அமெரிக்க தூதரக பணியாளர் தேவ்யானி கைது செய்யப்பட்டு கைவிலங்கு போட்டு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications