பதன்கோட்டில் உடம்பில் 6 தோட்டாக்கள் பாய்ந்தும் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய சைலேஷ்
பதன்கோட்: பதன்கோட்டில் தீவிரவாதிகள் சுட்டதில் தனது உடலில் 6 குண்டுகள் பாய்ந்தும் ஒரு மணிநேரம் போரிட்ட கருட் கமாண்டோ வீரரான சைலேஷ் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமான தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். 3 நாட்கள் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தாக்குதல் சமயத்தில் நடந்த சம்பவம் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்குள் நுழைந்த தகவல் கிடைத்தவுடன் அதிகாலை 3 மணிக்கு கருட் கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 12 வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
2, 2 பேராக அவர்கள் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளை தேடிச் சென்றுள்ளனர். குர்சேவக் என்ற வீரர் தீவிரவாதிகளை நோக்கி சுட அவர்கள் பதிலுக்கு சுட்டதில் அவர் மீது 3 குண்டுகள் பாய்ந்தது. இருப்பினும் அவர் தீவிரவாதிகளுடன் போராடி பின்னர் பலியானார்.
குர்சேவக் இறந்தவுடன் சைலேஷ் மற்றும் கட்டல் ஆகிய வீரர்கள் குழு துப்பாக்கி மற்றும் மெஷின் கன்களுடன் தீவிரவாதிகளுடன் போராடியது. தீவிரவாதிகள் சுட்டதில் சைலேஷின் வயிற்றுப் பகுதிக்கு கீழ் 6 குண்டுகள் பாய்ந்தன. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சைலேஷ் ஒரு மணிநேரமாக தீவிரவாதிகளை எதிர்த்து போராடியுள்ளார்.
குண்டு பாய்ந்து 3 மணிநேரம் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைலேஷ் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். நாட்டுக்காக தனது உயிரை மதிக்காமல் போராடிய அந்த வீரர் நலம் பெற மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். நாமும் பிரார்த்திக்கலாமே!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications