Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலை ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் பதினெட்டாம்படி பூஜை - 2036 வரை முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டாம் படி பூஜைக்கு 2036ஆம் ஆண்டுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: ஐயப்பன் தவமிருக்கும் சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பதும் ஐதீகம். பதினெட்டாம் படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2036ஆம் ஆண்டு வரையில் முன்பதிவு முடிந்துவிட்டது.

சபரிமலை 18 படியில் ஏற இருமுடி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். 1985ல் இந்த படிகட்டுகளுக்கு பஞ்சலோக தகட்டால் மூடப்பட்டு மேலும் புனிதமாக்கப்பட்டுள்ளது. ஐயப்பனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே சபரிமலையில் ஐயப்பன் சன்னதிக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் பதினெட்டாம்படி பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Pathinettam padi Pooja to get the perfect grace of Sabarimala Ayyappan Bookings until 2036

சபரிமலை ஐயப்பன் கோவில் என்றாலே ஸ்பெஷல் தான் என்பது அனைத்து மதத்தினருக்கும் தெரியும். அங்கு நடைபெறும், மண்டல பூஜை, மகர விளக்கு, மகர ஜோதி தரிசனம், மாதாந்திர பூஜை மற்றும் படி பூஜை என்று சொல்லப்படும் 18 படிகளுக்கும் நடைபெறும் பூஜையும் சிறப்பு வாய்ந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழை, மலைப்பிரதேசங்களில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு வரும் முன் பதிவு செய்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. கடந்த 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை முன் பதிவு செய்த பக்தர்களில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வந்து உள்ளனர்.

அதேபோல் தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு இருந்த போதிலும், குறைவான பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்கிறார்கள். அதிகபட்சமாக ஒரேநாளில் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர். பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால் வருமானமும் கடந்த சீசனை விட குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பக்தர்களின் வருகை குறைவு குறித்து விவாதிக்க திருவனந்தபுரத்தில் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரமாவது சன்னிதானத்தில் தங்க அனுமதி அளிப்பது குறித்து விவாதித்தனர். இது குறித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பம்பை ஆற்றில் நீராட தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசிடம் கோரிக்கை வைக்கவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் படி பூஜைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.75 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போல் உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம், சகஸ்ரகலச பூஜைக்கு ரூ.40 ஆயிரம், லட்சார்ச்சனைக்கு ரூ.10 ஆயிரம், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.10 ஆயிரம், அஷ்டாபிஷேகத்திற்கு ரூ.5 ஆயிரம், திருவிழா நாட்களில் நடத்தப்படும் உத்தவ பலிக்கு ரூ.30 ஆயிரம் என பல்வேறு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

படி பூஜை என்பது 18 தேவதைகளையும் 18 படிகளில் ஆவாஹணம் செய்து அவர்களை பூஜிப்பதாகும். படி பூஜை நடைபெறும்போது, 18 படிகளையும் நன்கு சுத்தம் செய்து, பட்டு விரித்து, அலங்கரித்து பூ மற்றும் பழங்களை வைத்து வெகு விமரிசையாக பூஜை நடத்தப்படும். ஆனால், படி பூஜை நடைபெறும் சமயங்களில் பக்தர்கள் படியேறுவது தடைபடுகிறது என்ற காரணத்தினால், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் படி பூஜையானது கடந்த 18 ஆண்டுகளான நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை வழக்கமாக மாத பூஜை நாட்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. சமீப காலமாக மாத பூஜை நாட்களில் நடத்தப்பட வேண்டிய படி பூஜை பல்வேறு காரணங்களால் திட்டமிட்ட படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விடுபட்ட முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்களுக்கான படி பூஜை தற்போது சீசனையொட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜைக்கு 2036ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக உதயாஸ்தமன பூஜைக்கு 2026ஆம் ஆண்டு வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+