பாட்னா தொடர் குண்டுவெடிப்பு: ஜார்க்கண்ட்டில் ஒருவர் கைது
பாட்னா: பாட்னா தொடர் குண்டுவெடிப்பு சதியில் தொடர்புடைய ராஜு சாவோ என்பவனை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தில் பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அக்டோபர் 27-ல் பங்கேற்ற பீகார் மாநிலத்தின் பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் படுகாயாமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் கோபால்குமார் கோயல், விகாஷ் குமார், பவண் குமார், கணேஷ் குமார் ஆகியோர் பாட்னா தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு நிதி உதவி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பல இடங்களில் சோதனைகள் நடத்தினர். இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கொடுத்த தகவலின் பேரில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டம் ஜஹாரியா என்ற இடத்தில் பதுங்கி இருந்த ராஜூ சவோ என்பவனை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் தலைமறைவாகிவிட்ட அவனது சகோதரர்கள் மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications