தேசிய புலனாய்வு குழு பாட்னா விரைகிறது- நிதீஷுடன் பிரதமர் ஆலோசனை
டெல்லி: பாட்னாவில் மோடி கூட்ட அரங்குக்கு அருகே தொடர் குண்டுவெடிப்புகல் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து பாட்னாவுக்கு தேசிய புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பீகார் அரசிடமும் அறிக்கை கோரியுள்ளது. முதல்வர் நிதீஷ் குமாரை, பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு குண்டுவெடிப்பு குறித்து விசாரித்தார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று மோடியின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் மோடி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ரயில் நிலையத்திலும், கூட்ட அரங்குக்கு வெளியேயேயும் குறைந்த சக்தியிலான குண்டுகள் வெடித்தன. இதனால் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.

இதையடுத்து பீகார் அரசை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் பேசியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறும் அது உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் குழுவும் பாட்னா விரைந்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்கையில், பாட்னா ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு அதி்ர்ச்சியும், கவலையும் தெரிகிறது. இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மாநில அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. வெடிகுண்டின் தன்மை குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம்.
சட்டம் ஒழுங்கு நிலையை கட்டுக்குள் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications