Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்மிருட்டில் பெண் செய்த வேலை.. அதென்ன பக்கத்துல.. எல்லாருமே உறைஞ்சி போயிட்டாங்க.. இப்படி நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: காதல் எதையும் செய்ய தூண்டும்போலும்.. காதலுக்கு கண்ணில்லை என்பதும் உண்மைதான் போலும்.. இருட்டில் ஒரு பெண் செய்த காரியத்தை பாருங்களேன்..!!!
கடந்த வருடம் பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விசித்திர சம்பவம் நடந்தது.. கரெக்ட்டா சாயங்கால நேரம் ஆனால், அந்த கிராமத்தில் கரண்ட் கட் ஆகிவிடுமாம்.

குழப்பம்: எப்படி தினமும் கரண்ட் போகும்? மழை, காற்று எதுவும் இல்லாமல், கரண்ட் போகிறதே என்று குழம்பினார்கள்.. அதனால், அக்கம்பக்க கிராமத்தில் இப்படி தினமும் கரண்ட் போகிறதா என்று விசாரித்தனர்.. அவர்களும் தங்களுக்கு கரண்ட் பிரச்சனை எதுவும் கிடையாது என்று சொன்னார்கள்.. இதனால், மறுபடியும் குழப்பமானார்கள்..

Patna Village Electrical Secret issue and Why Did the Young woman save his Lover

அதனால், மின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, ஏன் இப்படி எங்களுக்கு கரண்ட் அடிக்கடி போகிறது? என்று புகார் தந்தனர். அந்த புகாரை பார்த்து அதிர்ந்து போன அலுவலகத்தினர், நாங்கள் அதுபோல் கரண்ட் கட் செய்யவில்லையே என்றனர். இதைக் கேட்டு கிராம மக்கள் மீண்டும் குழம்பினார்கள்..

கரண்ட் கட்: அதனால், கரண்ட் தினமும் எப்படி போகிறது? என்பதை அறிய தாங்களே நேரடியாக களத்தில் குதித்தனர்.. உண்மையை ஆதாரத்துடன் கண்டறிய கிராம மக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்தனர்.

அந்த நேரம் பார்த்துதான், அதே கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவர், அங்குள்ள பள்ளி ஒன்றிற்குள் நுழைந்தார்.. கரண்ட் கனெக்‌ஷனை நிறுத்திவிட்டு, அங்கிருந்த காதலியை கொஞ்சி குலாவ ஆரம்பித்தார்.. இதை அனைத்தையும் கவனித்த ஊர்மக்கள், எலக்ட்ரீஷியனை, கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர்..

Patna Village Electrical Secret issue and Why Did the Young woman save his Lover

இருட்டில் சந்திப்பு: இந்த எலக்ட்ரீஷியன் ஒரு பெண்ணை காதலிக்கிறார்... அந்த பெண்ணும் இதே கிராமத்தை சேர்ந்தவர்தான்... காதலியை தினமும் இவர் சென்று சந்தித்து விட்டு வருவது வழக்கம்.. ஆனால், இருட்டில் காதலியை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே, அந்த ஒட்டுமொத்த கிராமத்தின் கரண்ட்டையும் துண்டித்து விடுவாராம்.. இதை கேட்டு கொந்தளித்து போன மக்கள், அங்கேயே அவரை வெளுத்தெடுத்தனர்.. ஆனால், அத்துடன் விடவில்லை..

காதலித்து வந்த பெண்ணை, ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டனர்.. கரண்ட்டை கட் பண்ண போய், இப்போது தன்னுடைய வாழ்க்கையில் "ஒளியேற்றிய" ஊர்மக்களை நினைத்து திக்குமுக்காடி போய்விட்டார் எல்க்ட்ரீஷியன் மாப்பிள்ளை. இப்போதும் அச்சுஅசல் இதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது..

கரண்ட் கட்: பீஹாரில் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ளது பெட்டியா நகரம்... இதை ஒட்டிய ஒரு கிராமத்தில் கடந்த ஒரு வாரமாகவே நைட் நேரத்தில் கரண்ட் போயுள்ளது.. வெயில் காலமும் முடிந்துவிட்ட நிலையில், கரண்ட் தினமும் ஏன் கட் ஆகிறது என்று கிராம மக்கள் புரியாமல் விழித்தனர்.. இரவில் பல மணி நேரம் கரண்ட் போய்விடுவதால், திருட்டு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத சம்பவங்களும் அடுத்தடுத்து நடக்க ஆரம்பித்தன. இதனால் கிராம மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மின்துறையினரிடம் புகார் தந்தனர்.. ஆனால், மின்வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கரண்ட் ஏன் கட் ஆகிறது என்பதை கண்டுபிடிக்க, அந்த கிராமத்து இளைஞர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கினார்கள்.. இளைஞர்கள் களமிறங்கியதும, சிறுவர்களும் அவர்களுக்கு உதவியாக களமிறங்கினர்.

முன்னுக்குபின் முரண்: இரவில் கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும், இரவு நேரத்தில் சோதனைகளை நடத்தினர். ஒவ்வொரு தெருவிலும் இளைஞர்கள் நுழைந்து ஆய்வு செய்தபோது, ராஜ்குமார் என்பவர், ஒரு தெருவில் குறுக்கும் நெடுக்குமாக இருட்டில் ஓடிக்கொண்டிருந்தார்.. இதனால், அவரை பிடித்து இளைஞர்கள் விசாரித்திருக்கிறார்கள். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவும் அதற்குள் கிராம மக்கள் திரண்டு வந்துவிட்டனர்.. ராஜ்குமாரை சரமாரியாக வெளுத்தெடுத்தனர்..

அப்போது திடீரென, "அவரை அடிக்காதீங்க" என்று ஒரு பெண் குரல் கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.. அந்த பெண்ணின் பெயர் ப்ரீத்தி.. அவரும் அதே கிராமத்தை சேர்ந்தவர்தான்.. ராஜ்குமார் தன்னுடைய காதலன் என்றும், அவரை யாரும் அடிக்காதீங்க என்றும் கோபமாக கத்தினார்.. இதற்கு பிறகு கிராம மக்கள் ப்ரீத்தியிடம் விசாரணை நடத்தினார்கள்.

Patna Village Electrical Secret issue and Why Did the Young woman save his Lover

பேச்சுவார்த்தை: அப்போதுதான் தெரிந்தது ராஜ்குமாரை சந்திக்க தினமும் அந்த கிராமத்தில், மின் தடையை ஏற்படுத்தியது ப்ரீத்தி தானாம்.. இதைக்கேட்டு அதிர்ந்து போனார்கள் கிராம மக்கள்.. கிராமத்து இளைஞர்களிடம் ப்ரீத்தி கடுமையாக வாதம் செய்தார்.. ராஜ்குமாரை இளைஞர்கள் தாக்குவதும், ப்ரீத்தி ஓடிவந்து அவரை காப்பாற்றுவதும், வீடியோவாக இணையத்தில் வெளியாகி உள்ளது..

அந்த வீடியோவில், ப்ரீத்தி தன் கையில் செல்போனை வைத்துக்கொண்டு, யாருக்கோ டயல் செய்கிறார்.. பிறகு செல்போனையே அடிக்கடி எடுத்து பார்க்கிறார்.. மற்றொருபுறம், இளைஞர்களை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.. இளைஞர்கள் தாக்க வந்தால், ராஜ்குமார் கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்கிறார். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.

கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? இந்த விவகாரம் இத்துடன் முடியவில்லை. ராஜ்குமார் மற்றும் ப்ரீத்தியின் குடும்பத்தாரிடம் பேச்சு நடத்தி, 2 பேருக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்க போகிறார்களாம். இது எப்படி இருக்கு??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+