மோடி இப்டிப் பண்ணிட்டாரே... நம்ம தொழில் இன்னாகுமோ... சங்கடத்தில் "சேட்டு"கள்!
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சென்னையில் உள்ள பான் புரோக்கர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனராம்.
சென்னை: மக்களின் பணச் சிக்கலுக்கு தீர்வு கூற 24*7 தயாராக இருப்பவர்கள் சேட்டுகள்தான்...அதாவது (அடகு) வட்டிக் கடைக்காரர்கள். ஆனால் இப்போது அவர்களுக்கே பணச் சிக்கல் வந்துள்ளதாம். ரூபாய் நோட்டு ஒழிப்பால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனராம் சென்னை நகரிலும், பிற நகரங்களிலும் உள்ள சேட்டுகள்.
சேட்டுகள் மட்டுமல்லாது, பெரிய மற்றும் சிறிய நிதி நிறுவனங்களும் கூட இந்த சிக்கலுக்குத் தப்பவில்லையாம். அனைவருமே கடந்த ஒரு வாரமாக பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்களாம்.
இவர்களின் சிக்கலுக்குக் காரணம் கை நிறைய வைத்துள்ள கட்டுக்கட்டான பணத்தை எப்படி மாற்றுவது என்பதுதானாம். அதை விட முக்கியமாக தங்களது தொழிலின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர்கள் புலம்புகிறார்கள்.

பணம் இருந்து என்ன புண்ணியம்
பணத்தின் மதிப்பை ஒவர்நைட்டில் காலியாக்கி விட்டார் மோடி. கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த அத்தனை பேரும் இன்று பொலிவிழந்து போய் விட்டார்கள். பலர் போண்டியாகி விட்டதாகவும் கேள்வி.

எல்லோர் தலையிலும் துண்டு!
பலரும் தலையில் துண்டைப் போடும் நிலைக்கு வந்து விட்டனர். குறிப்பாக பான் புரோக்கர்கள் எனப்படும் அடகுக்கடைக்காரர்கள். கட்டுக்கட்டாக பணம் வைத்துக் கொண்டு அடகுப் பொருளுக்குப் பணம் கொடுத்து குண்டக்க மண்டக்க வட்டி வசூலிக்கும் சேட்டுகள்தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனராம்.

வசூல் இல்லை.. திருப்பமுடியவில்லை
வாடிக்கையாளர்களிடம் கொடுத்த பணத்தை வசூலிக்க முடியாமல் தவிக்கிறார்களாம். அடகுப் பொருட்களைத் திருப்பவும் முடியவில்லையாம். அதை விட முக்கியமாக தங்களிடம் உள்ள பணத்தை மாற்றவும் முடியாமல் தத்தளிக்கிறார்களாம்.

பெரும் குழப்பத்தில் செளகார்பேட்டை
சென்னையில் செளகார்பேட்டை, வேப்பேரி, சிந்தாதிரிப்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் உள்ள அடகுக் கடைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அத்தனை சேட்டுகளும் மத்திய அரசு மீது கடும் காட்டத்தில் உள்ளனர்.

பொறுமையா இறுங்கோ
அவர்கள் கூறுகையில் அடகு வைத்த பொருட்களை எங்களிடம் வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள். எங்களால் அதைத் திருப்பித் தர முடியாத நிலை. நாங்கள் லாக்கரில்தான் பொருட்களை வைத்திருப்போம். குறிப்பாக நகைகளை. ஆனால் லாக்கர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் திறக்க அனுமதிக்கப்படாமல் உள்ளது. எங்களால் பணத்தையும் மாற்ற முடியவில்லை.

சுத்தமாக முடங்கி விட்டது
எங்களது தொழில் சுத்தமாக முடங்கிக் கிடக்கிறது. வாகனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள்தான் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். பணத்தை திரும்பப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடன் வாங்கியவர்களை நெருக்கவும் முடியவில்லை என்று கூறுகிறார்கள் அடகுக் கடைக்காரர்கள்.

செக் ரிட்டர்ன்
ஆட்டோக்கள், டூவீலர்கள் உள்ளிட்டவற்றை விற்ற பைனான்ஷியர்களும் தவணைப் பணத்தைத் திரும்ப வசூலிக்க முடியாமல் உள்ளனராம். யாரிடமும் கையில் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications