யமுனா நதியில் மலம் கழித்தால் ரூ.5000 அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: யமுனா நதி மற்றும் அதன் கரையை ஒட்டிய பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழிக்கவும், கழிவுகளை கொட்டவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யமுனா நதியில் ஏற்பட்டு வரும் மாசுவை கட்டுப்படுத்துவது மற்றும் தூய்மை செய்வது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Pay Rs 5,000 fine if caught defecating on Yamuna floodplains

அப்போது, யமுனா நதி மற்றும் அதன் கரையை ஒட்டிய பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழிக்கவும், கழிவுகளை கொட்டவும் நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார். மீறினால் ரூ.5 ஆயிரம் அபராம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், இதனை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

யமுனா நதியில் கழிவுகளை கொட்டும் தொழிற்சாலைகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசு மற்றும் முனிசிபல் கார்ப்பரேசனுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Delhi government and the municipal corporations were directed to immediately take action against industries which operate in residential areas.
Please Wait while comments are loading...