இஷான் கிஷனின் இரட்டை சதம்.. அதைப்பார்த்த பின் நம்பிக்கை தகர்ந்தது.. ஷிகர் தவான் பகிர்வு!
மொஹாலி: இந்திய ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அனுபவ வீரர் ஷிகர் தவான் பேசியுள்ளார். அதில் வங்கதேச அணிக்கு எதிராக இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசும் வரை மீண்டும் கம்பேக் கொடுக்கும் நம்பிக்கை இருந்ததாகவும், அதனை பார்த்த பின் அந்த நம்பிக்கை தகர்ந்ததாகவும் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான். இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் எழுச்சியால் இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் ஒருநாள் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஷிகர் தவான், இந்திய அணியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான்
இதனால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஷிகர் தவானும் தனது அனுபவத்தை இந்திய அணிக்கு புரிய வைப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சிக்கு ஷிகர் தவான் பேட்டியளித்துள்ளார்.

ஷிகர் தவான் பேட்டி
அதில் இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். அதில், இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நான் இருந்தாலும் எனக்கு பதிலாக சுப்மன் கில்லையே தேர்வு செய்வேன். ஏனென்றால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் உச்சபட்ச ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா கேப்டன்சியை எடுத்துக் கொண்ட போது, அவரும் டிராவிட்டும் எனக்கு முழு ஆதரவையும் கொடுத்தனர்.

இஷான் கிஷனின் இரட்டை சதம்
2022ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பில் சிறப்பாக செயல்படும் போது, நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசுவதற்கு முன்வரை, எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றே நினைத்தேன். ஆனால் இரட்டை சதத்திற்கு பின், அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

ஷிகர் தவானுக்கு பாராட்டு
இது எனக்கு மட்டுமல்ல, இதற்கு முன் பலருக்கும் நடந்திருக்கிறது. அதனால் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும், ஷிகர் தவானை பாராட்டி வருகின்றனர். அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications