ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.- பி.டி.பி. இடையே உடன்பாடு: முதல்வராகிறார் முப்தி முகமது சயீத்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பி.டி.பி.யின் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சயீதுக்கு முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து 28 இடங்களை பிடித்த பி.டிபி.யும், 25 இடங்களை பிடித்த பாரதிய ஜனதாவும் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு, ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெறுவது ஆகிய விவகாரங்களில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.
இதேபோல் மேற்கு பாகிஸ்தானில் இருந்து 25,000 குடும்பங்கள் அகதிகளாக தஞ்சமடைந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் ஆட்சி செலுத்துவதில் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதிலும் இரு கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி முடிவுக்கு வந்தன.
இதனடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பி.டி.பி. கட்சித் தலைவர் முப்தி முகம்மது சயீது 6 ஆண்டுகளும் பதவி வகிப்பார் என்றும் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. மேலும் இரு கட்சியினருக்குமான இலாகாக்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டனவாம்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் பி.டி.பி.- பா.ஜ.க. ஆட்சி அமையும் நிலை உருவாகி உள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்!












Click it and Unblock the Notifications