இந்த மழைக்கு இவ்வளவு பெரிய மீனா? மும்பை வீதிகளில் மீன்பிடித்த மக்கள்! வைரலாகும் போட்டோ!
மும்பையில் மழையின் போது ஊருக்குள் புகுந்த மீன்களை பொதுமக்கள் பிடிக்கும் போட்டோ வைராலாகியுள்ளது.
மும்பை: மும்பையில் மழையின் போது வீதிகளில் மேய்ந்த மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் வாட்டி வதைத்து வந்த வெயில் தற்போது விடைபெற்றுள்ளது. அவ்வப்போது திடீர் திடிரென மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மும்பையில் பரவலாக நல்ல மழை பெய்தது. மும்பை மற்றும் தானே, நவிமும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

மும்பையில் திடீர் மழை
இந்த மழையின் காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மழை நீரில் நீந்திய மீன்கள்
மேலும், தாராவி தோபிகாட் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. அப்போது மழைநீரில் மீன்கள் மேய்வதை பார்த்த அப்பகுதியினர் அதனை உற்சாகமாக பிடித்தனர்.

உற்சாகத்துடன் பிடித்த மக்கள்
கந்திவிலி பகுதியில் தேஜாஸ் மேத்தா என்பவர் மழையின் போது பிடித்த மீனுடன் போஸ் கொடுத்து அந்த போட்டோவை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அந்தப் போட்டோ தற்போது வைரலாக பரவியுள்ளது.
கூடுதல் மகிழ்ச்சி
மும்பையில் அப்படி ஒன்றும் பெரியளவு மழை பெய்யவில்லை என்று கூறும் அப்பகுதி மக்கள் இந்த மழைக்கே வீதிகளில் மீன்கள் மேய தொடங்கிவிட்டதாக கூறினர். வெளுத்த வெயிலுக்கு மழையே இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று கூறிய மக்கள் இதனால் மீன்கள் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications