பாட்னா: வெடிகுண்டை கல்லால் அடித்து செயலிழக்க முயற்சித்த மக்கள்
பாட்னா: பாட்னாவில் சம்பவ இடத்தில் கிடந்தவெடிகுண்டு மீது பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கற்களை எறிந்து அதனை செயலிழக்க முயற்சி செய்ததாக காயம்டைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிறன்று, பீகார் மாநிலத்தில் பாஜகவின் பிரதம வேட்பாளரும், குஜராத்தின் தற்போதைய முதல்வருமான நரேந்திர மோடியின் பொதுக்கூட்டம் நடைபெற இருந்த காந்தி மைதானத்திற்கு அருகில் ரயில் நிலையம் உட்பட 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி ஒரு சதிகாரன் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் , காயம்டைந்த 80க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த தொண்டர்கள் சிலர் தலைவர் வருகைக்காக பட்டாசு வெடிப்பதாக நினைத்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், இந்த குண்டுவெடிப்பில் தலையில் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஒரு நபர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு இது பற்றி கூறுகையில், ‘வாயில் கதவருகே மஞ்சள் நிற வெடிகுண்டு கடிகாரத்துடன் வைக்கப்பட்டிருந்தது. சிறுவர்கள் அந்த மஞ்சள் வெடிகுண்டு மீது கற்களை வீசித் தாக்கிவந்தனர். மோடி அப்போது பேசத் தொடங்கவில்லை. ஒரு மணியளவில் அது வெடித்தது' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
