துண்டாகி கிடந்த தலையுடன் செல்பி.. விமானம் விபத்து நடந்த இடத்தில் மக்கள் செய்த செயல்.. கொடூரம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிஜே மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர 241 பேர் பலியாகினர். இந்த விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் துண்டாகி கிடந்த மனித தலையுடன் இளைஞர்கள் போட்டி போட்டு ‛செல்பி' எடுத்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

people-takes-selfies-with-human-heads-at-bj-medical-college-campus-where-air-india-plane-crashed-in

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 241 ஆக உள்ளது. தற்போது வரை 200க்கும் அதிகமானவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்டவர்களின் உடல்கள் தீயில் கருகி உள்ளதால் அவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் விமான விபத்து தொடர்பான வீடியோ, விபத்தில் பலியானவர்களின் பின்னணி விவரங்கள் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க தற்போது புதிய வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி பிஜே மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஒருவரின் தலை துண்டாகி உள்ளது. தலை மட்டும் தனியே கிடந்தது. அதனை பார்த்த இளைஞர்கள் அதனை செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்தனர்.

மேலும் சிலர் துண்டாகி கிடந்த தலையின் அருகே நின்று ‛செல்பி' எடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. மருத்துவ கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தததில் கரும்புகை மேலெழும்பி வருவதும், அதனை கண்டுக்கொள்ளாமல் இளைஞர்கள் துண்டாகி கிடந்த தலையின் முன்பு நின்று ‛செல்பி' எடுத்ததும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

தலை துண்டாகி கிடந்தவர் யார்? பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த பெரும் துயரிலும் இளைஞர்கள் இறந்தவரின் தலை முன்பு நின்று ‛செல்பி' எடுத்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது. வீடியோவில் இருந்த தலை என்பது பார்க்க கொடூரமாக இருந்தது. இதனால் அந்த போட்டோ, வீடியோவை செய்தியில் காண்பிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+