தேங்காய், விபூதி பிரசாதத்துடன் வந்த இளையராஜா... விமானத்துக்குள் அனுமதி மறுப்பு !
பெங்களூரு: தேங்காய், விபூதி உள்ளிட்ட பிரசாதப் பொருட்களுடன் வந்த, இசைஞானி இளையராஜாவை விமானத்தில் செல்ல அனுமதி மறுத்ததால் பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இசைஞானி இளையராஜா தனது குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று வந்துள்ளனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இளையராஜா உள்ளிட்டோரை சோதனை செய்தனர்.

சோதனையில் அவர் கொண்டுவந்த பையில் தேங்காய், விபூதி உள்ளிட்ட பிரசாதப் பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து பிரசாதப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்கு விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும், விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்துள்ளார்.அதையும் போலீசார் அழித்தாக தெரிகிறது. இதையடுத்து பிரசாதப் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
முன்னதாக தேங்காய்,விபூதி உள்ளிட்ட பிரசாதப் பொருட்களுடன் குருவாயூர், மூகாம்பிகை கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்றுவிட்டு பிரசாதப் பொருட்களுடன் இளையராஜா விமானத்தில் பயணம் செய்துள்ளார். முதல் முறையாக பிரசாதப் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற காரணத்திற்காக அவரை பாதுகாப்பு அறையில் 1 மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications