ராஜ்தாக்கரே மனைவியின் முகத்தை கடித்து குதறிய செல்ல நாய்
மும்பை: மராட்டிய நவநிர்மான் சேன தலைவர் ராஜ் தாக்ரேவின் மனைவி ஷர்மிளாவை அவர்களின் வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த ஷர்மிளாவிற்கு 65 தையல்கள் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மராட்டிய நவநிர்மான் சேன தலைவர் ராஜ் தாக்ரே இவரது மனைவி ஷர்மிளா. இவர்கள் பாண்ட்,ஜேம்ஸ் என்ற இரு நாய்களை வளர்த்து வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 12 மணியளவில் பத்திரிக்கையாளார் சந்திப்புக்கு ராஜ்தாக்கரே தயாராக இருந்துள்ளனர். திடீரென்று பாண்ட் என்கிற நாய் ராஜ் தாக்ரே மனைவியின் முகத்தை சராமாரியாக கடித்தது. அப்போது ஷர்மிளா அலறித்துடித்தார். அவரது முகத்தில் இருந்து ரத்தம் பொல பொலவென கொட்டியது. உடனடியாக ஷர்மிளாவை மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 65 தையல்கள் போடப்பட்டது.
நாய் கடித்ததில் ராஜ் தாக்ரே மனைவியின் முக எலும்பு பகுதியில் நாயின் பல் ஆழமாக பதிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ராஜ்தாக்கரே செல்லமாக வளர்த்த வீட்டு நாயே அவரது மனைவியை கடித்து குதறிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications