பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.21, டீசல் லிட்டருக்கு ரூ.1.79 விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலையேற்றத்தைச் சந்தித்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 உயர்ந்துள்ளன. புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் ஒபெக் அமைப்பு ஒரு நாளைக்கு சுமார் 12 லட்சம் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதை நிறுத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச அளவில் கடுமையாக அதிகரித்துள்ளது.

நவம்பர் மாதம் 30 ம் தேதி சுமார் 47.25 டாலர் என்ற அளவில் விற்பனையான ஒரு பேரல், தற்போது அதிகபட்சமாக 55.56 டாலர் வரை விற்பனையாகிறது.
எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மக்கள் அவதி நீங்காத நிலையில், டெபிட், கிரெடிட் கார்டுகளில் பணத்தை செலுத்தினால் பெட்ரோல் நிலையங்களில் சலுகை தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய விலையேற்றத்தின் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.41க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.58.28க்கும் விற்பனை செய்யப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications