ஓட்டுப்போடவைக்க என்னவெல்லாம் செய்றாங்க… டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் 50 பைசா தள்ளுபடி
டெல்லி: டெல்லியில் வாக்களிப்பவர்களுக்கு பெட்ரோல் விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அஜய் பன்சால், டெல்லியில் ஏப்ரல் 10ம்தேதி வாக்குப்பதிவு நடக்கும்போது 67 பெட்ரோல் நிலையங்களில் தள்ளுபடி பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விரலில் மை அடையாளத்தை காட்டினால் லிட்டருக்கு 50 காசுகள் தள்ளுபடி தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஓட்டுப்போட தள்ளுபடி தருவதோடு மட்டுமல்லாது பல்வேறு பிரசார யுக்திகளையும் கையாண்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

சம்பளத்தோடு விடுமுறை
அரசு ஊழியர் முதல் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் வரை அனைவருக்கும் வாக்குப்பதிவு தினத்தன்று சம்பளத்தோடு கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டு போட வைக்க
ஒவ்வொரு ஓட்டும் மதிப்பு மிக்கது... ஓட்டுப்போடுவது உங்கள் உரிமை என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது.

விற்பனைக்கல்ல…
ஒரு ஒட்டுக்கு ரூ.பத்தாயிரம் வரை தர தயாராக இருக்கின்றன அரசியல் கட்சிகள். ஆனால் என் ஓட்டு விற்பனைக்கல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்துவருகிறது.

டான்ஸ் கூட இருக்கு…
கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தேர்தல் ஆணையமும் தயாராகிவிட்டது. கிராமிய இசைக்கலைஞர்களை வைத்து, பிரசார விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

தலையெழுத்தை மாற்றும்
ஒவ்வொரு ஒட்டும் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் என்பதால் அவசியம் ஓட்டுப்போடுங்க என்கின்றனர் அதிகாரிகள்.

தள்ளுபடியில் பெட்ரோல்
தமிழ்நாட்டில் விழிப்புணர்வு பிரசாரம் களைகட்டியிருக்க, டெல்லியில் ஓட்டுப் போட்ட விரலின் மை காண்பித்து லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி விலையில் பெட்ரோல் தருகின்றனர்.
நம்ம ஊர்ல இந்த திட்டம் இல்லையா பாஸ்?
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications