நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவு! ஏப். 20-ல் மீண்டும் கூடுகிறது!!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 2-வது அமர்வு ஏப்ரல் 20-ந் தேதி மீண்டும் கூடுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. ரயில்வே பட்ஜெட் 26-ந் தேதியும், 27-ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கை, 28-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நேற்று முடிந்தது. இதையடுத்து லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஒரு மாத கால விடுமுறைக்கு பின்னர், அடுத்த அமர்வு ஏப்ரல் 20-ந் தேதி தொடங்க உள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், இரு சபை நடவடிக்கைகளும் பலன் அளிக்கத்தக்கதாக அமைந்தன. அனைத்து அம்சங்களும் அடங்கிய பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் அவசர சட்டங்களுக்கு மாற்றாக சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள், நிலக்கரி சுரங்கங்கள் மசோதாக்கள் நிறைவேறி உள்ளன. அடுத்து காப்பீடு மசோதா நிறைவேறி இருக்கிறது. ஒத்துழைப்பு தந்த காங்கிரசுக்கு நன்றி. நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா ராஜ்யசபாவில் அடுத்த அமர்வில் நிறைவேற்றப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications