"ஃபிஷிங், மோசடிகள் மற்றும் டீப்ஃபேக்!" சைபர் மோசடிக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் முக்கிய நடவடிக்கை
As India's digital landscape expands, the Ministry of Home Affairs is enhancing cyber security measures to combat the rise in online crimes, ensuring citizen protection through the National Cyber Crime Portal and immediate assistance servic
டெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வேகமாக இருக்கும் நிலையில், இணைய மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. இணையக் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அதைக் கண்டறிந்து புகாரளிக்கும் வழிமுறைகளும் மேம்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்தியாவில் சைபர் மோசடி சம்பவங்கள் 2022-ல் 10.29 லட்சத்திலிருந்து 2024-ல் 22.68 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், பிப்ரவரி 2025 வரை, தேசிய இணையக் குற்ற அறிக்கை போர்ட்டலில் (NCRP) ₹36.45 லட்சம் மதிப்பிலான இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவின் சுமார் 86% வீடுகளுக்கு டிஜிட்டல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் வேலை, பணப்பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் மாற்றமடைந்துள்ளன. அதேநேரம் இந்த இணைய இணைப்பு, இணையவழி சுரண்டலுக்கான வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது, இதனால் டிஜிட்டல் பாதுகாப்பு ஒரு தேசிய முன்னுரிமையாக மாறியுள்ளது.
அதிகரிக்கும் மோசடிகள்
இணையக் குற்றவாளிகள் இப்போது ஃபிஷிங், ஸ்பூஃபிங் மற்றும் டீப்ஃபேக்குகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களையும், ஏமாற்று தந்திரங்களையும் பயன்படுத்தி அப்பாவி மக்களைக் குறிவைக்கின்றனர். இப்படி தான் சமீபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர், சத்குருவின் டீப்ஃபேக் வீடியோவுடன் வந்த போலி முதலீட்டுத் தளத்தை நம்பி ₹3.75 கோடியை இழந்தார்.
இதேபோல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்ற டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.. அரசு முதலீட்டுத் திட்டம் எனச் சொல்லி ஒரு திட்டத்தை அவர் விளம்பரப்படுத்துவது போல அதில் இருக்கிறது.. இந்த திட்டம் நம்ப முடியாத வருமானத்தை உறுதியளித்தது. மற்றொரு சம்பவத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயது நபர், மோதிலால் ஓஸ்வால் லோகோவைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு போலி செயலியில் முதலீடு செய்து ₹12.5 லட்சத்துக்கும் மேல் இழந்தார்.
இதேபோல மூத்த அரசு அதிகாரிகளின் டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு, இல்லாத திட்டங்களில் முதலீடு செய்யுமாறு மக்களைத் தூண்டி ஏமாற்றுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் மோசடிகள் எந்தளவுக்கு மிகவும் அதிநவீனமாகவும், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மாறிவிட்டன என்பதையே இது காட்டுகிறது.
சைபர் பாதுகாப்பு
இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க, உள்துறை அமைச்சகம் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) மூலம் பல அடுக்கு இணைய பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தியுள்ளது. தேசிய இணையக் குற்ற அறிக்கை போர்ட்டல் (www.cybercrime.gov.in) மூலம் ஆன்லைன் நிதி மோசடிகள், அடையாள திருட்டு மற்றும் பெண்கள், குழந்தைகளைக் குறிவைக்கும் குற்றங்கள் உட்பட பல்வேறு இணையக் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்கலாம்.
1930 என்ற உதவி எண் மூலமாகவும் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம்.. இதன் மூலம் அதிகாரிகள் மற்றும் வங்கிகள் மோசடி பரிவர்த்தனைகளை உடனடியாக முடக்க முடிகிறது. இந்த நடைமுறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு முதலீடு செய்து வருகிறது..
உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் கற்றல் தளமான CyTrain போர்ட்டலில் 1,05,796 காவல்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்த தளம் சைபர் மோசடி விசாரணை குறித்த பயிற்சி அளிக்கிறது. இதில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அதிகாரிகளுக்கு 82,704 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த நடவடிக்கை
இணைய அச்சுறுத்தல்கள் அனைத்து துறைகளையும் பாதிக்கும் என்பதால், உள்துறை அமைச்சகம் (MHA) தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் பிற முகமைகளுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மொபைல் எண்களை மீடியம், அதிக அல்லது மிக அதிக ஆபத்து என்று FRI அமைப்பு வகைப்படுத்துகிறது. இது தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் வங்கிகள் அத்தகைய எண்களை முடக்கவும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பே மோசடி நெட்வொர்க்குகளை காலி செய்யவும் உதவுகிறது.
இந்த கூட்டு முயற்சிகள் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் சூழலை உருவாக்க உதவுகின்றன.
பொதுமக்கள் விழிப்புணர்வு
இணைய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தாலும், பொதுமக்கள் விழிப்புணர்வே மிக முக்கியமான பாதுகாப்பு அரணாக உள்ளது. சரிபார்க்கப்படாத லிங்குகளை கிளிக் செய்வதையோ, OTP-களைப் பகிர்வதையோ அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் திட்டங்களில் முதலீடு செய்வதையோ தவிர்க்குமாறு மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
RBI மற்றும் SEBI போன்ற ஒழுங்குமுறை அமைப்புகள், போலி வர்த்தக செயலிகள் மற்றும் தவறான ஆன்லைன் விளம்பரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. CyberDost கீழ் நடைபெறும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மோசடிகளை அடையாளம் கண்டு தவிர்க்க எளிய வழிகாட்டுதல்களை மக்களுக்கு வழங்குகின்றன.
பாதுகாப்பான டிஜிட்டல் பாரதம்
அரசின் இலக்கு இணையக் குற்றவாளிகளைப் பிடிப்பது மட்டுமல்லாமல், டிஜிட்டல் விழிப்புணர்வு கலாச்சாரத்தை உருவாக்குவதும் ஆகும். மேம்படுத்தப்பட்ட புகார் முறை, ரியல்டைம் நடவடிக்கை மற்றும் நாடு தழுவிய பயிற்சி மூலம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்கள் பாதுகாப்பாக ஈடுபடுவதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்கிறது.
CyberDost மூலம் , விழிப்புடன் இருங்கள், ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள். பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 அல்லது cybercrime.gov.in க்கு புகாரளிக்கவும்.
YouTube - https://youtube.com/@cyberdosti4c
Instagram- https://www.instagram.com/cyberdosti4c?igsh=c2tteTd5Mjl2b2cw
Facebook- https://www.facebook.com/share/1KVuL1aJ9y/?mibextid=wwXIfr
X- https://x.com/cyberdost?s=11
Whatsapp- https://whatsapp.com/channel/0029Va3VAOY8fewrOtXqMw1V
Daily hunt - https://m.dailyhunt.in/profile/I4C_MHA
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications