சதானந்தகவுடாவுக்கு நெருக்கமானவர்கள் போனை ஒட்டுக்கேட்ட பெங்களூர் போலீஸ்! பாஜக அதிருப்தி
பெங்களூர்: மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடாவுக்கு நெருக்கமானவர்கள் ஐந்து பேரின் செல்போன் பேச்சுக்கள் பெங்களூர் போலீசாரால் ஒட்டுக்கேட்கப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய ரயில்வே அமைச்சருமான சதானந்தகவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீது நடிகை மைத்ரி என்பவர் பெங்களூர் போலீசில் பலாத்கார புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் கார்த்திக்கிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு அந்த நடிகை புகார் அளித்தார்.

போலீசில் ஆஜர்
இதையடுத்து ஆர்.டி.நகர் போலீசார் கார்த்திக் கவுடாவை தேடி வந்தனர். ஆனால் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றபிறகு கார்த்திக் கவுடா போலீசில் ஆஜரானார்.

போன் ஒட்டுக்கேட்பு
தற்போது நிபந்தனை ஜாமீனில் கார்த்திக் கவுடா உள்ளார். இந்நிலையில் சதானந்தகவுடாவின் அரசியல் உதவியாளர் திம்மேகவுடா, சதானந்தகவுடா மனைவியின் உறவுக்காரர் கவுதம், கார்த்திக்கவுடாவின் உறவுக்காரரும், நண்பருமான முரளி, சதானந்தகவுடாவின் தொழில்முறை கூட்டாளி அசோக் பை, சதானந்தகவுடாவின் அண்ணன் பாஸ்கர் கவுடா ஆகிய 5 பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உளவுத்துறை உஷார்
பெங்களூர் காவல்துறை வேவுபார்க்க அனுமதி கேட்டு செல்போன் சேவை நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தை, மத்திய உளவுத்துறை சேகரித்துள்ளது. இதன்மூலம் சதானந்தகவுடாவுக்கு இந்த விவகாரம் சென்று சேர்ந்துள்ளது.

7 நாட்கள் வேவு
இந்திய தொலைதொடர்பு சட்டப்படி, யார் மீதாவது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டால் முன் அனுமதியின்றி அதிகபட்சம் 7 நாட்கள் வரை அவரது செல்போன் உரையாடல்களை வேவு பார்க்க முடியும். 7 நாட்களுக்கும் மேல் ஒட்டுக்கேட்க வேண்டுமானால், மாநில உள்துறை செயலாளரின் அனுமதி அவசியம். கார்த்திக் கவுடா தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் செப்டம்பர் 5ம்தேதி முதல் 11ம்தேதிவரை பெங்களூர் போலீசார் மேற்கண்டவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டுள்ளனர்.

உள்துறை செயலர் அனுமதி மறுப்பு
7 நாட்கள் ஒட்டு கேட்ட பிறகு, கர்நாடக உள்துறை செயலர் எஸ்.கே.பட்நாயக்கிடம் இதுகுறித்து தெரிவித்து, தொடர்ந்து ஒட்டு கேட்க பெங்களூர் போலீசார் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் பட்நாயக் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பட்நாயக் நிருபர்களிடம் கூறுகையில், யாராவது நிலவு வேண்டும் என்றால் அதை வாங்கி கொடுக்க முடியுமா, ஒருவரிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக அவரை அடித்து மிரட்ட முடியுமா, அதுபோலத்தான் தொலைபேசி ஒட்டுக்கேட்பையும் எடுத்த எடுப்பிலேயே அனுமதிக்க முடியாது. இது ஒருவரின் பர்சனல் விஷயத்தில் தலையிடுவதாகும் என்பதால் நான் அனுமதிக்கவில்லை என்றார்.

நாடாளுமன்றத்தில் கிளப்ப பாஜக திட்டம்
இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது பெங்களூர் போலீசாரின் இந்த செயல் பற்றி பிரச்சினை கிளப்ப கர்நாடக பாஜக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர். கர்நாடக காங்கிரஸ் அரசு மத்திய அமைச்சரை அவமரியாதை செய்துவிட்டதாக அம்மாநில பாஜக கருதுகிறது. பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தீவிரவாதிகளின் போனை ஒட்டுக்கேட்பதைப்போல சதானந்தகவுடாவிடம் காவல்துறை நடந்துகொண்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இதை அரசியல்ரீதியாக கொண்டு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications