படங்களை வெளியிட்டு களங்கப்படுத்திய காதலன்.. ஆற்றில் குதித்து காதலி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில், ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காதலன் இணையத்தில் வெளியிட்டதால் அதிர்ச்சியடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள ஜமால்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் 16 வயது மகள், டியூசன் சென்டரில் சந்தித்த மாணவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றியுள்ளனர். அப்போது விதவிதமாக நிறைய புகைப்படங்களை அவர்கள் எடுத்துள்ளனர்.

தனது காதலன் மீது உயிராக இருந்துள்ளார் இந்த மாணவி. தனது நகைகளையெல்லாம் விற்று காதலனுக்கு பரிசுகளை வாங்கிக் கொடுத்துள்ளாராம்.

இந்நிலையில், சமீபகாலமாக தனது காதலரின் போக்கு சரியில்லை என சந்தேகித்துள்ளார் அம்மாணவி. வேறு பெண்ணுடன் காதலனுக்கு தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சந்தேகித்துள்ளார்.

கடந்த 5ம் தேதி மதியம் தனது காதலனைச் சந்திக்க சென்றுள்ளார் மாணவி. சிறிது நேரத்தில் மாணவி சபர்மதி ஆற்றில் குதித்து விட்டதாக அவரது காதலர், மாணவியின் தங்கைக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டது.

மாணவி தற்கொலை செய்து கொண்ட சில நாட்கள் கழித்து அவரது டைரி ஒன்றைக் கைப்பற்றியுள்ளார் அவரது தந்தை. அதில், மாணவி பல சமூகவலைதளப் பக்கங்களின் முகவரிகளையும், அவற்றின் பாஸ்வேர்டுகளையும் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதில், ஒரு சமூகவலைதளப் பக்கத்தில் மாணவி, அவரது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார் அவரது தந்தை ரஸ்ஸாக் சிப்பா. அவையனைத்தும் மாணவியின் காதலரால் பதிவேற்றம் செய்யப்பட்டவை என்றும், அதனால் தான் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசில் புகார் அளித்தார்.

ஆனால், அப்புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வெறுமனே தற்கொலை என்று மட்டும் வழக்குப் போட்டு விட்டு அமைதி காக்கிறதாம் போலீஸ். எனவே, இது தொடர்பாக மேல்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து புகார் அளித்து வருகிறார் அம்மாணவியின் தந்தை.

இதற்கிடையே, இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வசவா கூறுகையில், ‘அம்மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்துக் கொண்டிருப்பதாகவும், அதற்குப் பின்னரே இது குறித்து தெளிவான விவரங்கள் தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை மாணவியின் தந்தை தன்னை சந்தித்து புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மோடியின் பாஜக ஆட்சி நடத்தி வரும் குஜராத்தில் இதுவரை இந்த தந்தையின் கோரிக்கைக் குரலுக்கு விமோச்சனம் கிடைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+