நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம்! 3 பெண்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னணி பாலிவுட் சினிமா நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான கட்டிடத்தில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு அங்கு அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில், கடந்த ஏழாம் தேதி போலீசார் ரெய்டு நடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர். அந்த ஸ்பா உரிமையாளர் மானிக் சோனி தலைமறைவாகிவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் உண்மையிலேயே அந்த ஸ்பா, முன்னணி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமானது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

PIGGY CHOPS PROPERTY IN MUMBAI USED TO RUN SEX RACKET

மானிக் சோனிக்கு பிரியங்கா சோப்ரா குத்தகைக்கு இந்த ஸ்பாவை அளித்திருந்ததாகவும், உண்மையான உரிமையாளர் சோப்ராதான் என்றும் தெரியவந்துள்ளது. மொத்தம் 3 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த ஸ்பாவில் பியூட்டி பார்லர் நடத்துவதாக கூறி ஏமாற்றி விபச்சாரம் நடந்து வந்தது.

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மானிக் சோனி இந்னும் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்தால் நடிகைக்கும், அவருக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் குறித்து தகவல் கிடைக்கும்.

எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி சோப்ராவும் அவரது தாயார் மதுவும் அவ்வப்போது இந்த ஸ்பாவுக்கு வந்து சென்றதாக தெரிகிறது. பிரியங்காவின் தாய் மதுவும், சகோதரன் சித்தார்த்தும், இந்த ஸ்பா துவக்க விழாவில் பங்கேற்றுள்ளனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+