குளச்சல் துறைமுகம் திட்டத்தைக் கைவிட முடியாது: பினராயி விஜயனிடம் மோடி திட்டவட்டம்
டெல்லி: தமிழகத்தின் குளச்சல் துறைமுகம் திட்டத்தைக் கைவிட முடியாது என்று தம்மை நேரில் சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமரை நேரில் சந்தித்துப் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், குளச்சல் துறைமுக திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். ஆனால், இனயத்தில் அமையும் குளச்சல் துறைமுக பணிகளை தடுக்க முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக பிரதமரை சந்தித்து முறையிட்ட பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:
பிரதமரிடம் குளச்சல் துறைமுகத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினோம். இதனால் கேரளாவின் விழிஞம் துறைமுகம் பாதிக்கும் என சுட்டிக்காட்டினோம்.
ஆனால் விழிஞம், குளச்சல் துறைமுகம் அருகருகே அமைந்தால் அதிக வருமானம் கிடைக்கும். இரு துறைமுகங்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு வளர்ச்சி அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
அத்துடன் 2 துறைமுகங்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications