ஆர் எஸ் எஸ்ஸுக்கெல்லாம் போய் நான் அஞ்சுவேனா.. பினராயி அதிரடி!
சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளாகவும், அதற்கு ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.
திருவனந்தபுரம் : சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளாகவும், அதற்கு ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸ் - க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பினராயி விஜயன் பொறுப்பேற்றது முதல் கேராளாவில் ஆர் எஸ் எஸ் , பாஜக தொண்டர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகின்றன.

இதனை கண்டிக்கும் விதமாக மத்தியபிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் பகுதியின் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் குழு தலைவராக இருக்கும் குந்தன் சந்திரவாத் என்பவர் , இன்று கேராளாவில் நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக சர்ச்சைகுரிய கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
சந்திரவாத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள பினராயி விஜயன், ஏற்கனவே பலரது தலைகளை சங்பரிவார் அமைப்புகள் எடுத்துள்ளது என்றும் அதற்கு ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் கூறினார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயளாலர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், சந்திரவாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் ஆர். எஸ். எஸ் அமைப்பு ஒரு மாநில முதல்வருக்கே மிரட்டல் விடுக்கிறது.
இதிலிருந்து மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பு மற்றும் உதவிகளை அந்த அமைப்பு பெற்றுக் கொள்ளும் என தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , ஆர். எஸ். எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை தெரிவித்தருந்தார். இதனால் தான் சந்திரவாத் சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications