பிரதமர் மன்மோகனுக்கு மே 17-ம் தேதி பிரிவுபசார நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 10 ஆண்டு காலம் தொடர்ந்து பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு மே 17-ம் தேதி பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடக்கிறது.
இந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது என்று நாட்டு மக்களுக்கு அன்று அவர் உரையாற்றுகிறார்.

தனது உரையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டன என்பதை அவர் பட்டியலிடவிருக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 12ந் தேதியுடன் முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 16ந் தேதியன்று நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வந்ததற்கு மறுநாள் பிரதமரின் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்றிரவு தனது சகாக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அவர் விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications