இந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப்?
டெல்லி: மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா பராமரித்து வரும் பூடானின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை விட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை வெளியேற மறுத்துவிட்டது.
இதையடுத்து இந்தியா கடுமையாக போராடி அவர்களை வெளியேற்றியது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது போர் தொடுக்கவும் சீனா தயாரானது அதை எதிர்கொள்ள இந்தியாவும் தயாரானது. எனினும் இந்த ராணுவத்தினர் டோக்லாமை விட்டு வெளியேறியதால் போர் மூளவில்லை.

டோக்லாம்
இந்த பிரச்சினையால் இந்தியா- சீனா இடையே கடும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அந்நாட்டின் வுகான் நாட்டில் சந்தித்துக் கொண்டனர்.

அழைப்பு
அப்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பை தொடர்ந்து இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற சீன அதிபர் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பார்வை
அவ்வாறு இந்தியா வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து மோடி பேசுவார் என தெரிகிறது. அக்டோபர் 11 முதல் 13 வரை இந்த சந்திப்பு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சீன அதிகாரிகள் பார்வையிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சிற்பங்கள்
இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்தது. இந்த சந்திப்பின்போது இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தின் சிற்பங்களையும் வரலாற்று சின்னங்களையும் பார்வையிடுவார்கள் என தெரிகிறது.
-
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications