மிசோரம்: ஒரே மேடையில் பிரசாரம் செய்ய மறுத்த முதல்வர் ஜோரம்தங்கா- இன்றைய கூட்டத்தை கேன்சல் செய்த மோடி
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய முதல்வர் ஜோரம்தங்கா மறுத்திருந்தார். இதனால் மிசோரமில் இன்று பங்கேற்க இருந்த தேர்தல் பிரசார கூட்டத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மிசோரமில் பிரசாரம் செய்கிறார்.
40 தொகுதிகளைக் கொண்டது மிசோரம் மாநில சட்டசபை. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தொங்கு சட்டசபை: மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில் பாஜகவும் தேர்தல் களத்தில் நிற்கிறது. தேர்தல் கருத்து கணிப்புகளைப் பொறுத்தவரையில் மிசோரம் மாநிலத்தில் இம்முறை தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் அதிகம் என்கின்றன.
பாஜக கூட்டணி: மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, வடகிழக்கு மாநிலங்களுக்கான கூட்டணி ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. ஆனால் மணிப்பூர் குக்கி இனமக்களுக்கு எதிரான வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்தவில்லை என்கிற அதிருப்தி தொடருகிறது. மிசோரம் மாநிலத்தின் பூர்வடிகளும் குக்கி இனமக்களும் தொப்புள் கொடி உறவு கொண்ட ஒரே இன மக்கள் என்பதால் இந்த கோபத்தை மிசோ தேசிய முன்னணி வெளிப்படுத்துகிறது.
மோடியுடன் ஒரே மேடை இல்லை: இதனாலேயே மிசோரமில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்ய இருந்த நிலையில் அவருடன் ஒரே மேடையில் பங்கேற்க முடியாது என மிசோரம் முதல்வரும் மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக அறிவித்தார். இது பாஜகவை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து பிரதமர் மோடி தமது மிசோரம் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டார். பிரதமர் மோடிக்கு பதில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மிசோரமில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications