For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு 'சூப்பர்' பதிலடிகொடுத்த சுஷ்மாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். மேலும் 4 அம்ச அமைதி திட்டம் ஒன்றையும் அவர் முன்வைத்தார்.

இதனையடுத்து ஐ.நா.சபையில் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், பாகிஸ்தான் குறிப்பிட்ட 4 அம்ச அமைதி திட்டத்தை நிராகரித்து தீவிரவாதத்தை மட்டும் நீங்கள் கைவிடுங்கள் என்று சரியான பதிலடி கொடுத்தார்.

PM Modi Congratulates Sushma Swaraj for 'Excellent Speech' at UN

பாகிஸ்தானின் பேச்சுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேர்த்தியான பதில்களை, உலகநாட்டு பிரதிநிதிகள் அமர்ந்து இருந்த அவையில் வெளியிட்டார். இதற்காக சுஷ்மாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், சுஷ்மா சுவராஜி ஜி யிடம் பேசினேன், அவருடைய சிறப்பான பேச்சுக்கு பாராட்டுக்களை தெரிவித்தேன். உலகின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான சரியான உரையாடலாக இருந்தது என்று பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார்.

English summary
PM Narendra Modi called up External Affairs Minister Sushma Swaraj to congratulate her on her excellent speech at the UN General Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X