தமிழக முதல்வருக்கு நோ.. குஜராத் முதல்வருக்கு எஸ்.. அப்பாயிண்ட்மென்டில் பாரபட்சம் காட்டிய மோடி!
காவிரி பிரச்சனை குறித்து நேரில் சந்தித்து விவாதம் நடத்த நேரம் கேட்டு இருந்த தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: காவிரி பிரச்சனை குறித்து நேரில் சந்தித்து விவாதம் நடத்த நேரம் கேட்டு இருந்த தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணியை சந்திக்க அவர் இன்று நேரம் ஒதுக்கி உள்ளார். இது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது இதற்காக எல்லா மாநில முதல்வர்களும் டெல்லி சென்று இருக்கிறார்கள்.பிரதமர் மோடி தலைமை தாங்கி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. காவிரி பிரச்சனைக்காக டெல்லி சென்று இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவிரி பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் விவாதிக்க தமிழக முதல்வர் நேரம் ஒதுக்க கேட்டு இருந்தார். மேலும் மோடியை சந்திக்க நேரம் கிடைத்தால் தமிழக பிரச்சனைகள் குறித்தும், காவேரி வாரியம் குறித்தும் பேசுவேன் என்று முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் பிரதமர் மோடியை இன்று சந்திக்க முடியாது என்று தமிழக முதல்வரிடம் கூறப்பட்டு உள்ளது. தமிழக முதல்வரை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விஷயம் பெரிய பிரச்சனை ஆகியுள்ள நிலையில் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி தற்போது குஜராத் முதல்வர் விஜய் ரூபாணியை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி இருக்கிறார். அவர் நேரம் கேட்டவுடன், பிரதமர் மோடி சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சந்திக்க இருக்கிறார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications