தீவிர பாதுகாப்பில் பதன்கோட் விமான படை தளம்: பிரதமர் மோடி இன்று வருகை !
டெல்லி: பதன்கோட் விமான படை தளத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்த வாரம் 2 ஆம் தேதி நுழைந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இந்திய தரப்பில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததனர்.
நாட்டின் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சேகரிக்கப்பட்ட தடயங்களின் படி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்று தேசிய புலானய்வு துறையினர் உறுதிப்படுத்தினர். தீவிரவாதிகள் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்ததாகவும் அதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது.

இந்த நிலையில் பதான்கோட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை செல்கிறார். பதான்கோட் விமானப் படை தளத்தை அவர் பார்வையிடுகிறார். பின்னர் தீவிரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதிய வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார் என டெல்லி பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதன்கோட் விமான படை தளத்தை சுற்றி பன்மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications