ஒடிசாவை பாஜகவிடம் 5 வருஷம் கொடுங்க.. அப்புறம் பாருங்க.. நரேந்திர மோடி பேச்சு
புவனேஸ்வர்: ஒடிசாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள மோடி அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்தை (பிஜேடி) கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் ஒடிசாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜகவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தை பொறுத்த அளவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் vs பாஜக vs காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 21 தொகுதிகளுக்கு மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. பாஜகவும் 21 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியை பொறுத்த அளவில், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இதே தேதியில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
எனவே அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இன்று பெஹ்ராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவர் பேசியதாவது, "ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி காலாவதி ஆகப்போகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4ஆம் பிஜேடி காலாவதி ஆகிவிடும். ஒடிசாவை பாஜக நிச்சயம் நெ.1 மாநிலமாக மாற்றுவோம். அதற்காக மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒடிசாவுக்கு ஒடியா மொழியையும், அதன் கலாச்சாரத்தையும் புரிந்துக்கொள்ளும் முதலமைச்சர் தேவை. அப்படியான முதலமைச்சர்தான் இம்மக்களின் பிரச்னைகளை புரிந்துக்கொண்டு விரைவான தீர்வை உருவாக்குவார்.
அந்த வகையில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஜூன் 10ம் தேதி நடைபெறும் பாஜகவின் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு உங்களை அழைக்க நான் இங்கு வந்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக ஒடிசாவில் செயல்படாமல் வைக்கப்பட்டிருந்த பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை பாஜக அன்று முதல் செயல்படுத்த தொடங்கும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மூத்த குடிமக்களையும் இறைவன் ஜெகநாதர் கவனித்துக்கொள்வார்.
ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் மாதம் ரூ.6000 தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், பிஜேடி அரசு இந்த திட்டத்தை நிறுத்தியிருக்கிறது. ஜல் ஜீவன் மிஷனுக்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி அனுப்பியது. அந்த பணத்தை இங்குள்ள அரசால் செலவிட முடியவில்லை. சாலைகள் அமைப்பதற்கு பணம் கொடுத்திருக்கிறோம். ஆனால் இன்னமும் இங்கு சாலைகள் மோசமான நிலையில்தான் இருக்கின்றன.
காங்கிரஸுக்கு 50 ஆண்டுகளும், பிஜேடிக்கு 25 ஆண்டுகளும் கொடுத்திருக்கிறீர்கள். பாஜகவுக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள். ஒடிசாவை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம்" என கூறியுள்ளர்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்!












Click it and Unblock the Notifications