3 கண்டம்.. 6 நாடு.. 5 நாட்கள்... மோடியின் மின்னல் பயணம்... சுருக்கமாக!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜூன் 4ம் தேதி தொடங்கிய இந்த பயணத்தை "ரமணா" பாஷையில் சொல்வதானால்.. 3 கண்டம், 6 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ளார் மோடி.
ஈரான், ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் மோடி சுற்றுப்பயணம் செய்தார். பல்வேறு ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டது. ஆப்கானிஸ்தானில் ஒரு நட்புறவு அணையையும் திறந்து வைத்தார் மோடி.
கடந்த 5 நாட்களில் மோடியின் சுற்றுப்பயணம் குறித்த சுருக்கமான ஒரு பார்வை...

ஈரான்
மே 22 - 23 ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி ஈரானில் சுற்றுப்பயணம் செய்தார். 12 ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. கலாச்சாரம், அறிவியல், கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

ஆப்கானிஸ்தான்
ஜூன் 4ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்தார் மோடி. இந்த பயணத்தின்போது சல்மா அணைக்கட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தியா - ஆப்கானிஸ்தான் நட்புறவு அணை என்று இது அழைக்கப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது ஆப்கானிஸ்தானின் உயரிய சிவிலியன் விருதும் மோடிக்கு வழங்கப்பட்டது.

கத்தார்
ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கத்தார் சென்றார் மோடி. இந்தப் பயணத்தின்போது 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணத்தின்போது நல்லெண்ண அடையாளமாக 23 இந்தியக் கைதிகளை கத்தார் நாடு விடுதலை செய்தது.

சுவிட்சர்லாந்து
ஜூன் 6ம் தேதி சுவிட்சர்லாந்துக்குச் சென்றார் மோடி. கருப்புப் பணப் பிரச்சினை குறித்து அப்போது சுவிட்சர்லாந்து அரசுடன் விரிவாகப் பேசினார் மோடி.

அமெரிக்கா
ஜூன் 6 முதல் 8ம் தேதி வரை அமெரிகாவில் பயணம் செய்தார் மோடி. அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார். வர்த்தகர்களிடமும் பேசினார். அமெரிக்க நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார்.

மெக்சிகோ
ஜூன் 9ம் தேதி மெக்சிகோவுக்குச் சென்றார் பிரதமர் மோடி. என்எஸ்ஜி எனப்படும் அணு ஆயுத சப்ளை குழுவில் இந்தியாவையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தருவதாக மெக்சிகோ அதிபர், பிரதமர் மோடியிடம் உறுதியளித்தார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications