மலேசிய விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்
டெல்லி: மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்த தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசியாவின் எம்ஹெச்17 என்னும் 777 போயிங் ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் 295 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அவ்விமானப் பாதையில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் விமானமும் பயணிக்க இருந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளன. பிராங்போர்ட்டில் இருந்து அவ்வான்வழிப்பாதையில் பறக்க இருந்த மோடியின் விமானம், இந்த சம்பவத்தின் காரணமாக வழி மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் 295 பேரின் உயிரைப் பறித்த இக்கொடூரமான சம்பவத்திற்கு நரேந்திர மோடி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் அனைவரும் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
"நம்முடைய எண்ணங்களும், வேண்டுதல்களும் இவ்விபத்தில் தங்கள் உயிரினை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என்று தன்னுடைய செய்தியில் மோடி தெரிவித்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications