ஆப்கான் பிரச்சனையில்.. பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்.. எல்லை காந்தி பேத்தி கோரிக்கை
கொல்கத்தா: ஆப்கானிஸ்தானில் நடக்கும் அரசியல் மாற்றங்களையும், அங்கு தாலிபான் பெற்ற வெற்றி மீதும் இந்திய பிரதமர் மோடியும் உலக தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லை காந்தி அப்துல் காபர் கானின் பேத்தி யாஸ்மின் நிகர் கான் பேட்டி அளித்துள்ளார்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்றுள்ளது. நேற்று முதல்நாள்தான் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியது. அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகியதை அடுத்து ஆப்கான் தாலிபான் வசம் சென்றுள்ளது.

இந்த நிலையில் ஆப்கான் விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லை காந்தி அப்துல் காபர் கானின் பேத்தி யாஸ்மின் நிகர் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானில் வாழும் இந்திய இஸ்லாமியர்களின் உறவினர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அங்கு வசிக்கும் இந்தியர்களின் உறவினர்களை அரசு பாதுகாக்க வேண்டும்.
இவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வர வேண்டும். ஆப்கானில் இருக்கும் சொந்தங்களை நினைத்து இந்தியாவில் இருக்கும் அவர்களின் உறவினர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். அங்கு போன் சேவை துண்டிக்கப்பட்டுவிட்டது. அங்கு நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் தங்களால் முடிந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.
மற்றவர்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஆப்கான் மக்களின் உறவினர்கள் கடும் பீதியில் உள்ளனர்.அங்கு இருக்கும் மக்களின் நிலை மீது பிரதமர் மோடியும், உலக நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபான்கள் அந்த நாட்டின் மைந்தர்கள் இல்லை. அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் இப்படி அவர்கள் ஆயுதங்களை வைத்து ஆட்சியை பிடித்துள்ளனர். அங்கு பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் சுதந்திரம் இல்லை. கட்டாய திருமணம் நடக்கிறது. இது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது.
Recommended Video
அங்கு கடந்த 40 முதல் 50 வருடமாக போர் நடந்து வருகிறது. அந்நாட்டு மக்களுக்கு போர் தேவை இல்லை. அவர்களின் குரலை உலக நாட்டுக்குள் கேட்க வேண்டும், என்று எல்லை காந்தி அப்துல் காபர் கானின் பேத்தி யாஸ்மின் நிகர் தெரிவித்துள்ளார். தற்போது கொல்கத்தாவில் வசித்து வரும் இவர் ஆல் இந்தியா பக்தூன் ஜிர்கா இ ஹிண்ட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
குவைத், பஹ்ரைன் மீது சரமாரி தாக்குதள்.. ஈரானின் வெறியாட்டம்.. CENTCOM கொடுத்த பகீர் அறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications