பார்த்துட்டே இருங்கே.. இந்தியாவுக்கு அவர் பெயரை ஒரு நாள் வைக்கப் போகிறார்.. மோடி மீது பாய்ந்த மமதா
கொல்கத்தா: எல்லாவற்றுக்கும் தம்முடைய பெயரை சூட்டும் பிரதமர் மோடி ஒருநாள் இந்தியாவின் பெயரையும் கூட தம்முடைய பெயரும் வருமாறு மாற்றிவிடுவார் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மமதா பானர்ஜி பேசியதாவது: இது அன்னை தெரசாவின் பூமி. பெண்களை பெருமிதமாக கொண்டாடுகிற நிலம் இது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்து கொள்ள முடியாது.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறது பாஜக. அந்த கட்சி ஆளும் குஜராத்தில் ஒவ்வொரு நாளும் 1944 கொலைகள் நடக்கின்றன. பலாத்காரங்கள் அதிகமாக நடைபெறுகின்ற 2 மாநிலங்கள் பாஜக ஆளும் உபி, குஜராத். இது அரசின் ஆவணங்களில் உள்ள தகவல்கள்தான்.
பிரதமர் மோடியுடன் நேருக்கு நேராக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். தேதியையும் நேரத்தையும் பிரதமர் மோடியே தீர்மானிக்கட்டும். நான் தயாராக இருக்கிறேன்.
கொரோனா தடுப்பூசிகளில் மோடியின் படத்தை போட வைத்துள்ளனர். அது கொரோனா தடுப்பூசி அல்ல. மோடி தடுப்பூசி. கல்லூரிகள், ஸ்டேடியங்களுக்கு தன்னுடைய பெயரை சூட்டி வருகிறார் மோடி. விரைவில் இந்தியாவின் பெயரையும் கூட மோடியின் பெயர் வருமாறு மாற்றிவிடுவார்.
மேற்கு வங்கத்தில் இலவசமாக அரிசி விநியோகிக்கிறோம். ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ900. அத்துடன் நாள்தோறும் சிலிண்டர் விலை உயருகிறது. மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இலவசமாக சிலிண்டரை மோடி தரவேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications