பாஜக பிளவுபடுத்துகிறது... நாங்கள் அன்பால் ஒருங்கிணைக்கிறோம் - ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சி விளிம்புநிலை மக்களுக்காக போராடி வருகிறது. வெறுப்பை நாங்கள் வெறுப்பால் எதிர்கொள்வதல்ல. அன்பினால் எதிர்கொள்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: பாஜக அரசு நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறது. காங்கிரஸ் கட்சி நாட்டை முன்னேற்றியது. பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது. பழமைவாதி கட்சியாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றார்.இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.
நேரு குடும்பத்திலிருந்து வரும் 6வது காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்றதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

தொண்டர்களுக்காக உரை
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். தன்னை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்றும் நாடு வறுமையாக இருப்பதற்கான நிலையை மாற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் பயணம்
13 ஆண்டுகளுக்கு முன்பு தான் அரசியலுக்கு வந்ததாக கூறிய ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி விளிம்புநிலை மக்களுக்காக போராடி வருகிறது. வெறுப்பை நாங்கள் வெறுப்பால் எதிர்கொள்வதல்ல. அன்பினால் எதிர்கொள்கிறோம் என்றும் கூறினார்.

பாஜக பிளவுபடுத்துகிறது
பாஜக அரசு நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறது. காங்கிரஸ் கட்சி நாட்டை முன்னேற்றியது. பாஜக மக்களை பிளவுபடுத்துகிறது. பழமைவாதி கட்சியாக இருக்கிறது. நாங்கள் முன்னேற்றுகிறோம் என்று கூறினார்.

அவர்களும் சகோதரர்களே
மக்களின் குரலை அவர்கள் நசுக்கிறார்கள். நாங்கள் மக்களை உக்கப்படுத்துகிறோம் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பாஜகவினரை நாங்கள் சகோதரர்களாகவே பார்க்கிறோம்.

ஒருவரின் குரல் மட்டுமே
நாடு முழுவதும் ஒருவரின் குரல் மட்டுமே ஒலிக்கிறது. என்ன சாப்பிடவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications