திடீரென மெட்ரோவில் ஏறி.. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த பிரதமர் மோடி.. புனேவில் சுவாரசிய சம்பவம்
புனே: பிரதமர் நரேந்திர மோடி புனேவில் மெட்ரோ ரெயில் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். அதன்பின் அவர் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரெயிலில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியபடி பயணம் செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வானஸ்-கார்வார், பிசிஎம்சி-புகிவாடி இடையே புதிதாக மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.11,400 கோடி மதிப்பிட்டில் திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்துக்கு 2016ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் துவங்கப்பட்டு சுறுசுறுப்பாக நடந்தது.

மோடி துவக்கி வைப்பு
இந்நிலையில் கார்வார் கல்லூரி முதல் ஆனந்த் நகர் வரையிலான 12 கிலோமீட்டர் மெட்ரோ பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இன்று பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயில் இயக்கத்தை பச்சைக்கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கலந்துரையாடல்
இதையடுத்து அவர் டிக்கெட் எடுத்து மெட்ரோ ரெயிலில் பயணித்தார். அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான படங்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், ‛‛புனே மெட்ரோவில் இளம் நண்பர்களுடன் பயணம் செய்தேன்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆனந்த் நகரில் மெட்ரோவி் இருந்து இறங்கியவுடன் அங்குள்ள புத்தகத்தில் பயண அனுபவம் குறித்து எழுதினார்.

குறித்த காலத்தில்...
அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ‛‛இந்த திட்டத்துக்கு நான் அடிக்கல் நாட்டினேன். இப்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். குறித்த காலத்துக்குள் பணிகள் முடிக்க வேண்டும். பல ஆண்டுகளாக நாட்டில் திட்டங்கள் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியை மந்தப்படுத்திவிடும். இன்று இந்தியாவில் திட்டங்கள் வேகமாகவும், கவனமாகவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது" என்றார்.

சத்ரபதி சிவாஜி சிலை
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கேசியாரி, துணை முதல்வர் அஜித் பவார், எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நகர மேம்பாட்டு துறை அமைச்சர் எக்நாத் சிண்டே உள்பட பலர் இருந்தனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி புனே மாநகராட்சி அலுவலகத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications