வெள்ள பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வரும்.. நம்பிக்கையுள்ளது: மோடி பேச்சு
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்களுடன் ரேடியோவில் உரையாடும் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது, ஆல் இந்தியா ரேடியோ மற்றும், தூர்தர்ஷன் மூலம், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம், மக்களிடம் உரையாடிவருகிறார்.
இதன் 14வது நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமரிடம் சந்தேகம் கேட்க விரும்புவோர்கள், 180030007800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதையொட்டி பலரும் கேள்விகளை அனுப்பியிருந்தனர்.

மோடி கூறியதாவது: உலகில் தட்ப வெட்ப மாறுபாடு வேகமாக ஏற்பட்டுவருவதை நாம் உணர தொடங்கியுள்ளோம். இந்தியாவில் கூட காலம் கடந்து மழை பெய்கிறது. அதுவும் தொடர்ச்சியாக அதிக அளவுக்கு பெய்கிறது. தற்போது தமிழ்நாடு அதற்கு உதாரணம்.
விழாக்காலங்கள் மீது மக்கள் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு விழாக்கால நேரத்தில் மக்கள் நெருக்கடியில் சிக்கியது சோகத்தை மேலும் கூட்டியது. தமிழகத்தில் மத்திய மீட்பு குழு ஆய்வு நடத்திவருகிறது. வெள்ள சேதத்தில் இருந்து, தமிழகம் மீண்டுவரும். தமிழ்நாட்டின் பலத்தின் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது.
நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்ப சேதத்தை தொடர்ந்து, இயற்கை பேரிடரை சமாளிக்க சார்க் நாடுகள் இணைந்து, செயல்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே யோசனை கூறியிருந்தேன். அதை செயல்படுத்த வேண்டியது அவசியம்.
கடந்த மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, நான், உடல் உறுப்பு தானம் பற்றி பேசியிருந்தேன். இதையடுத்து, உறுப்பு தானம் தொடர்பான, NOTTO அமைப்பின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு செல்லும் தொலைபேசி அழைப்புகள் எண்ணிக்கை 7 மடங்கு அதிகரித்துள்ளதாம். அவ்வமைப்பின் வெப்சைட்டை பார்ப்போர் எண்ணிக்கை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதாம்.
உறுப்புகளை தானம் செய்யும்போது, அந்த உறுப்பு மட்டுமின்றி, மற்றொரு உடலும் புதிய வாழ்க்கையை பெறும் என்பதை உணர வேண்டும்.
Mygov.in வெப்சைட் மூலமாக, NOTTO-வுக்கு லோகோ தயாரிக்கும் போட்டி நடத்தியுள்ளோம். உறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்தை உணருங்கள்.
டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாகும். மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நமது நாடு பரந்து விரிந்தது. அனைத்து தேவைகளுக்கும் அரசையே எதிர்பார்க்கிறோம். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் ஈடற்ற உழைப்பை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு மோடி பேசினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications