Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த விழுப்புரம் கிராமத்தினர் - என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil
தமிழக உள்ளாட்சி தேர்தல்
BBC
தமிழக உள்ளாட்சி தேர்தல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தைச் சே்ரந்த இரண்டு கிராமங்களில் ஒரு கிராமத்தினர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளனர். மற்றொரு கிராமத்தை சேர்ந்த பலரும் வாக்குரிமையை செலுத்தினர். என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்திற்கு அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைக்கப்பட்டு கடந்த ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பொன்னங்குப்பம் ஊராட்சியில் துத்திப்பட்டு கிராமம் உட்பட சுமார் 4000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தலைவர், துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும், வார்டு உறுப்பினர்கள் உட்பட 12 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் துத்திப்பட்டு கிராமத்தில் அதிகபட்சமாக 2,700 வாக்குகள் உள்ளன. இதனால் உள்ளாட்சி தேர்தலில் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை துத்திப்பட்டு பிரதிநிதிகளே வகித்து வருகின்றனர். இதனால் பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு எவ்வித ஜனநாயக பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக தனி ஊராட்சி வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அதிகாரிகளுக்கு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அப்பகுதியில் உள்ள 7, 8, 9 ஆகிய வார்டுகளின் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 24 வேட்பாளர்களும் தங்களுடைய வேட்பு மனுவினை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் பொன்னங்குப்பதை சேர்ந்த கிராம மக்கள் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கும் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்தனர்.

உள்ளாட்சி தேர்தல்
BBC
உள்ளாட்சி தேர்தல்

இதன்படியே தேர்தல் நாளான‌ இன்று பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 1,498 பேர் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை துறையினர் மற்றும் முகவர்கள் தவிர்த்து அந்த வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேவேளை தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் ஏலம் விடப்பட்டு பெயரளவில் தேர்தல் நடத்தப்படுவதாக ஒரு பிரிவு கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கிடையே, அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேர்தலை புறக்கணித்த பொன்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் கூறுகையில், "துத்திப்பட்டு கிராமத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் இருப்பதால் அவர்கள் பதவியை ஏலம் விடுகின்றனர். கடந்த தேர்தலில் குளறுபடி இருந்தது. ஆனால் இந்த முறையும் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை ஏலம் விட்டுள்ளனர். இதனால் மூன்று வார்டுகளை உள்ளடக்கிய பொன்னாங்குப்பம் கிராமத்தில், எந்த அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்
BBC
உள்ளாட்சி தேர்தல்

மேலும் பெரும்பான்மையான வாக்காளர்கள் கொண்ட துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள், எங்கள் ஆதரவு தேவையில்லை என்று கூறி எங்கள் கிராமத்தை புறக்கணிக்கும் வகையில், தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை அவர்களே தீர்மானம் செய்யும் நபர்களை போட்டியிட வைக்கின்றனர்.

ஆகவே எங்கள் கிராமத்தை தனி ஊராட்சி பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தேர்தலை பொன்னங்குப்பம் கிராம மக்கள் முழுவதும் புறக்கணித்துள்ளோம். இதுவரை எங்கள் கிராமத்தில் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. மேலும் வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய 24 பேரும் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர்," என்று தெரிவித்தார்

வாக்களிக்க வந்த துத்திப்பட்டு கிராமத்தினர்.

பொன்னாங்குப்பம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், அதே ஊராட்சிக்கு உட்பட்ட துத்திப்பட்டு கிராம மக்கள் அனைவரும் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்தில் குவிந்தனர்.

இது குறித்து துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனிவேல் கூறுகையில், "40 ஆண்டு காலமாக பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த நபர்கள் தான் தேர்தல் போட்டியிட்டு வந்தனர். இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொன்னங்குப்பம் ஊராட்சியில் இருந்த துத்திப்பட்டு கிராமத்திற்கு எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. இதை மாற்ற நினைத்த நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம்.

குறிப்பாக, மருத்துவமனை, கிராம பஞ்சாயத்து, அஞ்சல் அலுவலகம் என எங்கள் தேவைகள் அனைத்திற்கும் அங்கே செல்ல வேண்டிய நிலையிருந்தது. ஆகவே எங்கள் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனித்து போட்டியிடக் கூடாது என்று முடிவு செய்தோம். அதற்காக போட்டியிடும் வேட்பாளர்களை எங்களுக்குள் சீட்டுக் குலுக்கி அதில் மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறோம். மேற்படி பதிவியை ஏலமிடுவதாக குற்றம்சாட்டுவது உண்மையில்லை," என பழனிவேல் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+